360 டிகிரி

உலகில் தனி மனித சுதந்திரம், நாடுகளை பொருத்தவரை முக்கியமானதாகும். இதில் பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் அதிகம் சாதித்து தனி மனித சுதந்தர அட்டவணையில் முன்னணி வகிக்கின்றன.

தனி மனித சுதந்திரம்
உலகில் தனி மனித சுதந்திரம், நாடுகளை பொருத்தவரை முக்கியமானதாகும். இதில் பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் அதிகம் சாதித்து தனி மனித சுதந்தர அட்டவணையில் முன்னணி வகிக்கின்றன.
கனடா:- இதற்கு தான் உலகில் முதலிடம். இந்த நாட்டில் உங்கள் கருத்தை துணிவாக கூற முடியும். மதம், மொழி முழு சுதந்திரம் அனுபவிக்கின்றனர்.
ஐயர்லாந்து:- தனி மனித சுதந்திரத்தில் இது நிறையவே சாதித்துள்ளது. ஆனால் பொது ஆரோக்கியம் சார்ந்தும் கடன் வழங்குதல் சார்ந்தும், இன்னமும் பல படிகள் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டியுள்ளது.
போர்ச்சுகல்:- தனிமனித சுதந்திரம் இங்கு சிறப்பாக பேணப்படுகிறது. கூடுதலாக மற்ற நாடுகளிலிருந்து வந்து குடியேறும் மக்களை ஏற்று அவர்களையும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி தனி நபர் வருமானத்தை கூட்டி காண்பித்துள்ளது கூடுதல் சிறப்பு.
உருகுவே:- லத்தீன் அமெரிக்கா நாடுகளை விட இங்கு சுதந்திரம் அதிகம். ஆனால் கல்வி வேலை வாய்ப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் பின் தங்கியுள்ளது வருத்தமளிக்கிறது.
பெல்ஜியம்:- உரிமை சார்ந்த சட்டங்களை மக்களுக்காக திருத்தி, கூடுதல் சுதந்திரம் அளித்துள்ளதால், தனி மனித சுதந்திர நாடுகளின் அட்டவணையில் இதற்கு தற்போது முன்னேற்றம்!
மேற்கூறிய நாடுகளை தவிர்த்து கோஸ்டாரிகா, ஸ்பெயின் மற்றும் சைப்ரஸ் நாடுகளும் முன்னிலை வகிக்கின்றன!
- ராஜிராதா, பெங்களூரு

கல்வெட்டுகளில்..
* ஏரி, குளம், தூர்வாருதலை "குழி குத்துதல்' என்பர். ஆண்டுதோறும் குழி குத்துவர். அனைவரும் பங்கேற்றல் வேண்டும். 
* மரண தண்டனைக்குத் "தலை விலை' என்று பெயர்.
* கோயிலுக்கு அளிக்கும் விறகு "எரிகரும்பு' எனப்படும்.
* வைணவ ஆலய கர்ப்பக் கிரகத்திற்கு "ஸ்ரீவயிறு' என்று பெயர்.
* ஏற்கெனவே உள்ள கல்லால் செய்யும் கோயில் திருப்பணி பொதுக்குதல் புதுக்கல் பயன்படுத்தினால் "புதுக்குதல்'.
* கோயில் கருவூலம் "பண்டாரம்'. பண்டாரப் பணியாளர் பண்டாரி பணியில் உள்ளவன். "அன்றாடு பண்டாரி', தலைவன் "பண்டார நாயகன்' மேற்பார்வையாளன் "பண்டாரக் கண்காணி'.
* சிவாலய நிலம்" திருநாமத்துக்காணி', விஷ்ணு கோயில் நிலம் திருவிடையாட்டம், சமண-பெளத்தக் கோயில் நிலம் "பள்ளிச்
சந்தம்'.
* சோதிடன் பெறும் நிலம் "கணி முற்றூட்டு'. சம்பளத்திற்குப் பதிலாக அளிக்கும் நிலம் "ஜீவிதம்'. கல்வி நிலைய நிலம் "சாலாபோகம்'.
* கோயில் கால்நடைப் பண்ணைக்கு "சுரபி' என்று பெயர். 
* தனி அம்மன் சந்நிதி பெயர் "திருக்காமக் கோட்டம்'.
* நாள் கூலி ஆணியம், மாதச் சம்பளம் "வேதனை'.
* சம்பளம், கூலி இல்லாமல் செய்யும் வேலை "வெட்டிமுட்டை'.
* சில ஊர்களில் திருமணத்திற்கும், இறப்புக்கும் வரி உண்டு. பெயர் "கண்ணாலக் காணம்', "சுடுகாட்டுப் பாட்டம்'.
* ஏரி, குளத்தில் மதகு "வாய்' எனப்படும். அதிலிருந்து நீர் செல்லும் இடம் "வாய்க்கால்'.
- புலவர் செ.இராசு, ஈரோடு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com