Enable Javscript for better performance
360 டிகிரி- Dinamani

சுடச்சுட

  

  முந்தைய மத்திய நிதி அமைச்சர்கள் பட்ஜெட் பேப்பர்களை ஒரு சிறிய சூட்கேஸில் போட்டு எடுத்து வருவார்கள். 
  இப்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த மரபை மாற்றிவிட்டார். 
  பட்ஜெட் பேப்பர்களை சூட்கேஸில் வைக்காமல் ஒரு சிகப்பு நிற பையில் போட்டு எடுத்து வந்தார். அந்த பையில் நம் தேசிய சின்னம் அசோகச்சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது.
  அந்த பையை வடிவமைத்தது நிதி அமைச்சரின் அத்தை. அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு அவருடைய அத்தை அந்த பையை மும்பை சித்தி விநாயகர், மஹாலட்சமி கோயில்களில் வைத்து பூஜை செய்த பிறகுதான் அமைச்சரிடம் கொடுத்தார்.
  அவரும் நாடாளுமன்றத்திற்கே வந்து பட்ஜெட் உரையை கேட்டார். பட்ஜெட்என்பது பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. 
  பட்ஜெட்டை பாராட்டிய பிரதமர், இரண்டே கால் மணி நேரம் பேசிய போது நீங்கள் ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்கவில்லையே என்று 
  வருத்தப்பட்டார்.
  - கே.ராமச்சந்திரன், பெங்களூரு
  * சாகாவரம் பெற்ற திரைப்படமான "கான் வித் த விண்ட்' கதாபாத்திரமான "ரெட்பட்லர்' வேடத்தில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட கிளார்க் கேபிள் என்ற நடிகர் ஹாலிவுட்டின் மன்னர் என்று புகழப்பட்டவர். உலகத் திரைப்படங்களில் தலைசிறந்தப் படங்களில் ஒன்றாக இப்படம் விளங்குகிறது.
  * மைசூர் பாகில் உள்ள மைசூர் என்ற சொல்லுக்கும் மைசூர் என்னும் ஊருக்கும் தொடர்பு கிடையாது. இந்த சொற்றொடரில் வரும் மைசூர் என்பது பாரசீக மொழியில் மிஸ்ரி என்னும் சொல்லின் திரிபாக உள்ளது. மிஸ்ரி என்பது கற்கண்டைக் குறிக்கும்.
  * எழுதப்படாமல் ஒருவர் சொல்லி ஒருவர் என்று செவி வழியாகவே சொல்லப்படும் கதைகளுக்கு கர்ண பரம்பரைக் கதைகள் என்று பெயர்.
  * கிரேக்க மொழியில் ஆக்டோ என்றால் எட்டு. பஸ் என்றால் கால்கள் "ஆக்டோபஸ்' என்றால் எட்டுக்கால் என்று பொருள்.
  * ஒரு சமயம் சார்லி சாப்ளின், முதல் தடவை சந்தித்ததற்குப் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, ஜப்பானிய வங்கி அதிகாரி ஒருவரை சந்தித்தார். 15 வருடங்களுக்கு முன்பு அவர் பேசிய விஷயத்தை தொடர்ந்து, தற்போதும் பேசியதைக் கண்ட அதிகாரி அப்படியே அசந்து போய்விட்டார். 
  * ஆனந்த பைரவி ராகம் அதிகப்படியான ரத்த அழுத்தத்தையும், சங்கராபரணம் மன உளைச்சலையும், பைரவி ஞாபக மறதியையும் குணப்படுத்தவல்லவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  * நரசிம்மராவ் ஐந்தரை மாதங்களும், வாஜ்பாய் 13 நாள்களும், தேவகெளடா 6 மாதங்கள் என 1996-ஆம் ஆண்டில் 3 பிரதமர்கள் இந்தியாவில் பதவி வகித்தார்கள். 
  * ஜீன்ஸ் பேண்ட்டுக்கு உண்மையான பெயர் டி.நைம்ஸ். பிரான்ஸ் நாட்டில் நைம்ஸ் என்ற நகரில் முதன் முதலாக ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கப்பட்டதால் இதற்கு இப்பெயர் தான் முதலில் வைக்கப்பட்டது. 
  - முக்கிமலை நஞ்சன்
  திருவல்லிக்கேணி -இரண்டாவது திருப்பதி எனப்படுகிறது. திருப்பதியில் செலுத்த வேண்டிய காணிக்கையை இங்கே செலுத்தினால் போதும். புராணங்களில் இத்தலம் பிருந்தாரண்யம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வில்லுப்பாட்டுக் குழுவில் ஒரு பின்பாட்டுக்காரர் இருந்தார். ஒரு முறை காந்தி கதை வில்லுப்பாட்டு நடந்து கொண்டிருந்தது. அப்போது தண்டி யாத்திரையில் காந்தியின் உப்பு சத்தியாகிரகம் பற்றிய பாட்டை பின் பாட்டுக்காரரைப் பாடச் சொல்ல அவருக்கு இரண்டாவது வரி மறந்து போய் உப்பை எடுத்தார். உப்பை எடுத்தார் என்று ஐந்து முறை அதே வரியைப் பாடிக் கொண்டிருந்தார். மக்கள் திருதிருவென விழித்தனர்.
  உடனே கலைவாணர் எவ்வளவோ போராடி உப்பு சத்தியாகிரகம் நடத்திய காந்தி அங்கு சென்று ஒரே ஒரு தடவைதான் உப்பை எடுத்திருப்பாரா பல தடவை குனிந்து குனிந்து உப்பை எடுத்திருப்பார். அதனால்தான் நம் பாட்டுக்காரரும் தத்ரூபமாக உப்பை எடுத்தார் என பல முறை பாடிக்காட்டினார் என்று போட்டார் ஒரு போடு: பாடகரின் மறதியைத் தன் மதி நுட்பத்தால் மாற்றிய கலைவாணருக்கு கைதட்டல்கள் குவிந்தன.
  - பே.சண்முகம், செங்கோட்டை

  லிங்கனுக்குரிய ஏழு கிழமைகள்
  ஆபிரகாம் லிங்கன் பிறந்தது ஞாயிற்றுக்கிழமை. முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது திங்கட்கிழமை. இரண்டு முறை ஜனாதிபதியானது செவ்வாய்க்கிழமை. வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டது புதன்கிழமை. பிரசித்தி பெற்ற கெட்டிஸ்பர்க்கில் உரையாற்றியது வியாழக்கிழமை. சுடப்பட்டது வெள்ளிக்கிழமை. உயிர் நீத்தது சனிக்கிழமை.
  -ஆதினமிளகி, வீரசிகாமணி
  * குளிர் நீரை விட வெந்நீரின் எடை குறைவாகவே இருக்கும்.
  * நாய்க்கு முன்னங்காலில் 5 விரல்களும், பின்னங்காலில் 4 விரல்களும் உள்ளன.
  * கழுகு உயிர் போகும் வரை போராடும் தன்மை கொண்டது.
  * கிவி பறவை பூனை மாதிரியே கத்தும்
  * ஜப்பானியர்கள் வருடம், மாதம், தேதி என்ற வரிசைப்படிதான் தேதியிடுவார்கள். அமெரிக்கர்கள் மாதம், தேதி, வருடம் வரிசைப்படிதான் தேதியிடுவார்கள்.
  * "பாபா பாபா பிளாக் ஷீப்' பாடல் இங்கிலாந்து அரசின் வரி விதிப்பதற்கு எதிராகப் பாடப்பட்ட பாடல்!
  * ஆண்கள் இடது பக்கமாகவும், பெண்கள் வலது பக்கமாகவும் படுத்து உறங்கினால் தான் உணவு எளிதில் ஜீரணிக்கும். 
  * சண்டைக் காட்சியில் டிஷ்யூம் டிஷ்யூம் என்ற பின்னணி சத்தம் பயன்படுத்தப்பட்ட முதல் படம் "திருடாதே'.
  -அமுதா அசோக்ராஜா
  அபயகரம்
  ஆஸ்திரேலியாவில் தற்போது 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசிக்கிறார்கள். அங்கு முருகன் கோயில் உண்டு. தமிழ் சார்ந்த அமைப்புகளும் நிறைய உள்ளன. அவற்றில் ஒரு அமைப்பின் பெயர் "அபயகரம்'.
  விமான தேவதை
  எந்தவொரு முயற்சியிலும மேலே மேலே போகணும்னு சொல்வாங்க. ஆனால் எனக்கு இது தான் தொழில் என்கிறார் நம்ரிதா சாண்டி. பெண் பைலட். ஆந்திர மாநிலத்தில் முதல் நிலை விமானியாக பணிபுரிந்து வரும் இவருக்கு விமான சாகசங்கள் என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி.
  கார்கில் போரிலும் பங்கெடுத்து உள்ளார். சக தோழிகளால் "விமான தேவதை' என்று வருணிக்கப்படும் நம்ரிதாவின் கணவர் நிகிலும் பைலட் தான்.
  மந்தாகினியைத் தெரியுமா?
  வானதி, பாகீரதி, மந்தாகினி, ஜானகி, வரநதி, புரநதி, திரிபதகை, விமலை - என்ன ஒரே பெண்களாக வருகிறதே என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு மேற்கண்ட பெயர்கள் பெண்களின் பெயர் மட்டும் அல்ல. இவை அனைத்தும் ஒரே ஒரு நதியை மட்டும் குறிக்கும் சொற்கள் ஆகும். அந்த நதி.. கங்கை நதி தான்!
  வங்காளத்தில் மணமாகாத, பெண்கள் தங்கள் பெயரோடு குமாரி என்று சேர்த்துக் கொள்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு குமாரி என்பது தேவியாகிவிடும். அதாவது மீனாகுமாரி, மீனா தேவி ஆகிவிடுவார்.
  - போளூர் சி.ரகுபதி. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai