தமிழில் தொடர்ந்து நடிப்பேன்

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த "நோட்டா' படத்தில் நடித்தவர், விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவர், தற்போது நடித்துள்ள படம் "டியர் காம்ரேட்'.
தமிழில் தொடர்ந்து நடிப்பேன்

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த "நோட்டா' படத்தில் நடித்தவர், விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவர், தற்போது நடித்துள்ள படம் "டியர் காம்ரேட்'. கடந்த வாரம் வெளியாகியுள்ள இப்படம் குறித்து அவர் பேசும் போது.... "நோட்டா' படம் வெளியான பிறகு தமிழிலும் எனக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். எனவே, தொடர்ந்து தமிழில் நடிக்க விரும்புகிறேன். ஆனால், தமிழில் சரளமாகப் பேச முடியாமல் அவதிப்படுவதால், உடனே தமிழ் கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறேன். நோட்டா படத்தில் நடிக்கும்போது, அடுத்த நாள் படப்பிடிப்பில் எந்தெந்த காட்சி படமாக்கப்படுகிறதோ, அதற்கான வசனங்களை வாங்கிச் சென்று படித்து மனப்பாடம் செய்துகொள்வேன். இப்போது முக்கியமான சில தமிழ் படங்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளேன். விஜய் சேதுபதியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இணைந்து நடிக்க ஆசை' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com