இளைஞர்களை ஊக்கப்படுத்தும் இலங்கை தமிழர்

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான் ஆண்டனி. தற்போது கனடாவில் வசிக்கும் இவர் அங்கு வசிக்கும் தமிழ் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொலைக்காட்சி, வானொலி எனப் பல சேவைகள்
இளைஞர்களை ஊக்கப்படுத்தும் இலங்கை தமிழர்

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான் ஆண்டனி. தற்போது கனடாவில் வசிக்கும் இவர் அங்கு வசிக்கும் தமிழ் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொலைக்காட்சி, வானொலி எனப் பல சேவைகள் நடத்தி வருகிறார். சென்னை வந்த ஸ்டான் ஆண்டனியை நேரில் சந்தித்தோம்.
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றதும் இலங்கை தமிழில் கடகடவெனப் பேச ஆரம்பித்தார்:

""இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்,  1983-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தினால் 1986-ஆம் ஆண்டு கனடாவில் குடியேறினேன். அப்போது எனக்கு வயது 24. ஆரம்பத்தில் பழ்ன்ஸ்ரீந் க்ஷங்ஹழ்ண்ய்ஞ் கம்பெனியில் வேலை செய்தேன். அதனைத் தொடர்ந்து பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றினேன். அதிலுள்ள நுணுக்கங்களைக் கற்று தெரிந்து கொண்ட பின்பு நானே தனியாகப் பெட்ரோல் விற்பனை நிலையம் ஆரம்பித்தேன். அடுத்து ற்ண்ம் ட்ர்ழ்ற்ர்ய்ள் என்பது கனடாவில் பிரபலமான காபி ஷாப். இந்தக் காபி ஷாப் கிளை ஒன்றை நான் வசிக்கும் பகுதியில் தொடங்கினேன். தொழிலில் நல்ல நிலையை அடைந்த பிறகு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. 

2000- ஆம் ஆண்டில் "கனடியன் தமிழ் வானொலி' ஆரம்பித்தேன். 2001-ஆம் ஆண்டு "தமிழ் விஷன்' என்ற பெயரில் தொலைக்காட்சி தொடங்கினேன். 2003-ஆம் ஆண்டு ஃஎப்.எம் எனப்படும் பண்பலை வானொலி தொடங்குவதற்கு விண்ணபித்தேன். முறையான அங்கீகாரம் பெற்று 2004-ஆம் ஆண்டு பண்பலை தொடங்கப்பட்டது. எங்களுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பண்பலை நிகழ்ச்சிகள் அனைத்தும் அங்குள்ள தமிழ் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவே நடத்தப்பட்டு வருகிறது. சின்னத்திரை கலைஞர்களுக்கு உரிய வாய்ப்பு அளிப்பது, செய்திகள், டாக் ஷோ என எப்போதுமே யூத் ஸ்பெஷலாகவே இருக்கும். கனடாவில் நான்கு ரேடியோ ஒலிபரப்பு நிலையங்கள் உள்ளன. தமிழ், உருது, ஹிந்தி, பஞ்சாபி என நான்கு மொழிகளிலும் 24 மணி நேரம் சேவை அளித்து வருகிறோம். 2014-ஆம் ஆண்டு பண்பலை ஏஈ தரத்திலும், 2017-ஆம் ஆண்டு தமிழ் விஷன் தொலைக்காட்சி  ஏஈ தரத்திற்கும் உயர்த்தப்பட்டது.  வட அமெரிக்கக் கண்டத்தில் உருவாக்கப்பட்ட முதல் தொலைக்காட்சி எங்களுடையது தான்.'' 

இளைஞர்களை ஊக்கப்படுத்த செய்யும் விஷயங்கள் என்ன?

""தமிழர்களின் வீரம், சாதனை போன்றவற்றை வெளியுலகிற்குத் தெரியப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். குறிப்பாக இலங்கை பற்றி ஆவணங்களைச் சேமித்து வைத்துக் கொண்டு வருகிறோம். இலங்கை தமிழ் இனம் அழிப்பட்டது எப்படி என்பது நமது வருங்காலச் சந்ததியினருக்கு தெரிய வேண்டும். இது ஒருபுறம் இருக்க இசைத்துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்குப் பயிற்சி அளித்துப் பாட வைக்கிறோம். நாங்கள் பயிற்சி அளித்த பெரும்பாலானோர் விஜய் டி.வி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளைப் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் பரிசு பெற்று வந்த பிறகு இவர்களை வைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், பின்னணி பாடகியாக அவர்களை உருவாக்குகிறோம். இயக்குநராக ஆக விரும்புவர்களின் குறும்படங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து ஒளிப்பரப்புகிறோம். நாங்கள் ஏற்படுத்தியுள்ள தளம் மூலம் பல வழிகளில் இளம் தலைமுறையைச் சேர்ந்த ஆண்கள், பெண்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தருவதே எங்களுடைய பிரதான வேலை.''

வேறு தொழில் தொடங்கி நீங்கள் மீடியா துறைக்கு வருவதற்கான காரணம் என்ன?

""நான் ஒரு முதலீட்டாளர். பல தொழில்களில் முதலீடு செய்துள்ளேன். அப்படித் தான் முதலீடு செய்த துறைகளில் ஒன்று தான் மீடியா. கனடாவில் மூன்று லட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு பூர்வீகமாக வசிக்கும் கனடாவை சேர்ந்தவர்கள் பக்குவம் பெற்றவர்கள். எந்த நாட்டிலிருந்து கனடாவில் மக்கள் குடியேறினாலும் அவர்களை அரவணைத்து அன்போடு நடத்துவார்கள். தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பார்கள். அதனால் தான் நான் நினைத்த விஷயங்களை அங்குச் செய்ய முடிகிறது.''

மீண்டும் இலங்கை செல்லும் எண்ணம் இல்லையா?

""நான் இலங்கையில் பிறந்தாலும், கனடாவில் இருந்த ஆண்டுகள் தான் அதிகம். இப்போதுள்ள குண்டு வெடிப்பு போன்ற சூழ்நிலைகளைப் பார்க்கும் போது மீண்டும் இலங்கை சென்றாலும் வாழ முடியுமா என்று தெரியவில்லை. தொன்மையில் மட்டுமல்ல தொடர்பிலும் உள்ள மொழி தமிழ். அடுத்து வரும் சந்ததியினருக்கு தமிழின் பெருமைகளையும், தமிழரின் பெருமைகளையும் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. அதைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்'' என்கிறார் ஸ்டான் ஆண்டனி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com