ஆயிரம் ஜென்மங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் "ஆயிரம் ஜென்மங்கள்'. ஜி.வி. பிரகாஷ், ஈஷா ரெப்பா, சதீஷ், ஆனந்தராஜ், நிகிஷா படேல், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஆயிரம் ஜென்மங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் "ஆயிரம் ஜென்மங்கள்'. ஜி.வி. பிரகாஷ், ஈஷா ரெப்பா, சதீஷ், ஆனந்தராஜ், நிகிஷா படேல், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திகில் கதையாக உருவாகி வரும் இப்படத்தை எழில் எழுதி இயக்குகிறார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞனுக்கு, வெளி நாட்டில் பேய் பிடித்த நபரிடம் இருந்து, பேயை விரட்ட வேண்டும் என்ற சவாலான வேலை வருகிறது. அந்தச் சவாலான வேலையை ஏற்றுக்கொண்ட ஹீரோ, பேயை விரட்டி அந்த நபரை காப்பாற்றினாரா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
 இந்தத் திகில் படத்தை, மிகவும் ஜனரஞ்சகமாகத் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை கலந்து, மிகவும் சுவராஸ்யமாக உருவாக்கி வருகிறார் எழில். யூ.கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோபி கிருஷ்ணா கவனித்திருக்கிறார்.சத்யா - இசை. யுகபாரதி, விவேக், ராகேஷ், கருங்குயில் கணேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
 படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com