சுடச்சுட

  
  sk14


  பார்த்திபன் எழுதி இயக்கி வரும் படம் "ஒத்த செருப்பு சைஸ் 7' படத்துக்கு "யூ' சான்றிதழ் கிடைத்துள்ளது.

  "நான் வழக்கமாக ஒரு ஸ்கிரிப்டை எழுதி, அதை உருவாக்கும் போது, தணிக்கை சான்றிதழ் செயல்முறையை மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன். சமரசம் செய்வதன் மூலம், திரைக்கதை அதன் தாக்கத்தை இழக்கும் என்று நான் நம்புகிறேன். "ஒத்த செருப்பு சைஸ் 7' கதையும் அந்த வகையில் எழுதப்பட்டது தான். அதற்கு தணிக்கை குழுவில் "யூ' சான்றிதழ் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 

  என்னைப் பொருத்தவரை, ஒரு படத்திற்கு இரண்டு சான்றிதழ் செயல்முறைகள் உள்ளன. ஒன்று தணிக்கை குழுவிடம் இருந்து வருவது, மற்றொன்று பார்வையாளர்களிடம் இருந்து வருவது. எனவே நான் எனது திரைப்படத்தை அவர்களிடம் முன்வைக்க ஒரு மாணவரை போல ஆர்வமாகக் காத்திருக்கிறேன்.  சந்தோஷ் நாராயணனின் இசை, ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பாளர், அமரனின் கலை அமைப்பு, மற்றும் சுதர்சனின் படத்தொகுப்பு ஆகியவை ஒவ்வொன்றும் கதாபாத்திரங்களாகவே வெளிப்படுத்தப்படும். 

  அதற்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் ஓர் அற்புதமான தொழில்நுட்பக் குழுவையே சாரும். படத்தின் இறுதி வடிவத்தை நான் காணும்போது, நிச்சயமாக அது எனது எதிர்பார்ப்புகளை மீறிய ஒரு பதிப்பாக அமைந்திருக்கிறது' என்றார் பார்த்திபன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai