சுடச்சுட

  
  sk11


  ஹோலி ரெடிமர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "நீர்முள்ளி'. சுமா பூஜாரி  நடிக்கிறார். மற்றும் ரேகா, மெய்வாரா, பொன்னம்
  பலம், வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி,நளினி, வீரலட்சுமி, இயக்குநர் அகத்தியன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். புதுமுகம் ஹிட்லர் எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார். படம் குறித்து பேசும் போது..."இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்தில் பெண்கள் தங்களை  சார்ந்த   ஆண்  உறவுகளை எப்படி கையாள்கிறார்கள், அதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகளைச் சந்திக்கிறார்கள் என்பதுதான்.

  திரைக்கதை. காலத்திற்கேற்ப பெண்களின் எண்ண ஓட்டமும் மாறுபடுவதால் ஏற்படும் சீர்கேடு பற்றி பேசும் கதை." நீர்முள்ளி' என்பது வயல் வெளிகளில் காணப்படும் ஒரு முள்செடி. அதை அகற்றுவது என்பது சிரமம். எப்படி கையாண்டாலும் முள் குத்திவிடும். ஆனால், அதன் மருத்துவ குணங்கள் அதிகம். அது போலதான் பெண்களும் சிறு தவறுகளை உணர்ந்துகொண்டு நடந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்' என்றார் ஹிட்லர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai