சுடச்சுட

  
  sk13


  அறிமுக இயக்குநர்  ராஜவேல் கிருஷ்ணா எழுதி, இயக்கி வரும் படம் "பிழை'. "காக்கா முட்டை' படத்தில் நடித்த ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நாசத் இருவரும் கதையின் முக்கிய  வேடங்களில் நடிக்கின்றனர். 

  தர்ஷினி, ராகவேந்திரா சிரஞ்சீவி, பிருந்தா, அரவிந்த் காந்த், சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சிறுவர்களின்  தற்கால மன நிலையைப் படம் பிடிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதை பற்றி பேசும் போது.. "கல்வி இல்லாமல் இங்கே எதையும் சாதிக்க முடியாது என்பதுதான் ஒன் லைன். 

  பெற்றோர்களை வெறுத்து, கல்வியை வெறுத்து ஓடும் சிறுவர்கள்தான் நீங்கள் கடந்து போகும் சிக்னலில் நின்று கையேந்துகிறார்கள். அவர்களுக்கான ஒரு படமாக இது இருக்கும். இன்னொரு பக்கம் பெற்றோர்களின்  நியாய - தர்மங்களையும் எடுத்து வைக்கிறேன். குழந்தைகளின் உலகத்தில் அசிங்கம் என்பதே இல்லை. அதனால்தான் உலக இலக்கியங்களும், சினிமாக்களும், கதைகளும் குழந்தைகளைப் பற்றியே பேசி விடுகின்றன.

  வ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு. அதுதான் இந்தக் கதையின் ஊடாக வெளிப்படும். சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாக்கள் இந்தக் கதையின் இன்னொரு பகுதி' என்றார் இயக்குநர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai