சுடச்சுட

  
  sk12


  2017-ஆம் ஆண்டு வெளிவந்த "ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது "ஸ்பைடர் மேன் ஃபார் ஃபிரம் ஹோம்'.

  முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஜூலை 5-ஆம் தேதி திரைக்கு வருகிறது. முதல் பாகத்தில் ஸ்பைடர் மேனாக நடித்த டாம் ஹோலேண்ட் இந்தப் படத்திலும் ஸ்பைடர் மேனாக நடித்துள்ளார்.

  ஐரோப்பா நாடுகளைச் சுற்றிப் பார்க்க கிளம்பும் டாமுக்கு முக்கியப் பொறுப்பும் வருகிறது. மனித குலத்துக்குப் பெரும் ஆபத்துகளை விளைவிக்கத் தயாராகும் சில சக்திகளை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயம் டாமுக்கு ஏற்படுகிறது.

  அப்போது நடக்கும் சம்பவங்களும், நிகழ்வுகளுமே கதையின் பிரதானம். முதல் பாகம் இயக்கிய ஜான் வாட்ஸ் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். ஜென்டயா கதாநாயகியாக நடிக்கிறார்.

  மேத்யூ ஒளிப்பதிவு செய்கிறார். மைக்கேல் இசையமைக்கிறார். லண்டன், இத்தாலி, பெர்லின், மெக்சிக்கோ உள்ளிட்ட பல நாடுகளில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடந்துள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai