360 டிகிரி

நமது உடலில் தினமும் 0.8 லிட்டர் வியர்வை வெறியேறுகிறது.ஒட்டக சிவிங்கியின் நாக்கு ஒன்றைரை அடி நீளத்துக்கு மேல் இருக்கும்.
360 டிகிரி

நமது உடலில் தினமும் 0.8 லிட்டர் வியர்வை வெறியேறுகிறது.
ஒட்டக சிவிங்கியின் நாக்கு ஒன்றைரை அடி நீளத்துக்கு மேல் இருக்கும்.

-பரத், சிதம்பரம்


 சிங்க நகரம் 

மொத்தம் 810 வார்தைகள் ஜப்பானிய மொழியிலும் தமிழ் மொழியிலும் ஒரே மாதிரி ஒரே சொல்லாய் உள்ளன. 

உலகின் மிக குளிரான பகுதி பிளேட்டோ ஸ்டேஷன், அண்டார்டிகா-மிக ஈரமான பகுதி மெüசின் ராம் மேகாலயா, இந்தியா.

குடும்பக் கட்டுப்பாடு பற்றி முதன்முதலில் பாடல் எழுதிய பிரபலம் பாரதிதாசன். 

நோயாளிகளை ஆம்புலன்சில் எடுத்துச்செல்லும் முறை முதன்முதலில் 1796-ஆம் ஆண்டு நெப்போலியன் காலத்தில் ஏற்பட்டது.

-முக்கிமலை நஞ்சன்


 விதை கிடையாது 

வாழை மரத்திற்கு விதை கிடையாது.

உலகம் முழுவதிலும் 2100 வகையான வாழைகள் உள்ளன.

இந்தியாவில் 380 வகைகள் இருக்கின்றன.

-உ.ராமநாதன், நாகர்கோவில்


விமான டயர்களில் காற்று அடைப்பது இல்லை. நைட்ரஜன் வாயுதான் அடைக்கப்படுகின்றது. எனவே விபத்து நடந்தாலும் விமான டயர்களில் தீ பிடிக்கும் வாய்ப்பு இல்லை. இதனால் பெரும்பாலான விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன.

-எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்


ஆஸ்கர் விருது 13.5 இஞ்ச் உயரமுடையது. 10 காரட் தங்கம் கொண்டது. 150 டாலர் பண மதிப்புள்ளது. இந்திய பண மதிப்பில் ஐந்தாயிரம் ரூபாய்  மதிப்புள்ளது. இந்த ஆஸ்கர் விருதின் உருவம் பிலிம் சுருளின் மேல் கத்தி வைத்த வீரர் ஒருவர் நிற்பது போல் இருக்கும்.

-எஸ்.சடையப்பன், காளனம்பட்டி

கேரள மாநிலம் நெல்லிசேரியில் சர்க்கஸ் கலைக்கல்லூரி செயல்படுகிறது.

தென் கொரியாவின் ஜனாதிபதி மாளிகை புளூ ஹவுஸ் எனப்படுகிறது.

-ஜோ. ஜெயக்குமார், சிவகங்கை


இடது கை பழக்கம் உள்ளவர்கள் கலந்து கொள்ள முடியாத விளையாட்டு "போலோ'.

"கிர்'காடுகளில் வசிக்கும் சிங்கங்கள் வெறுங்கையுடன் செல்பவர்கள் எவரையும் கொல்வதில்லையாம்!

-பே.சண்முகம், செங்கோட்டை

வாங்கி உபயோகப்படுத்தும் பால் பசும்பாலா அல்லது எருமைப்பாலா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். 

பாலை நன்றாகக் காய்ச்சவும். பிறகு ஆற விடவும். பாலேடு மஞ்சள் நிறத்துடன் கூடியதாக இருந்தால் அது பசுவின் பால். வெள்ளை நிறமாக இருந்தால் அது எருமைப்பால்

-மஞ்சரி, கிருஷ்ணகிரி


எந்த விளையாட்டுக்கு மைதானம் மிகப்பெரியதாக இருக்க வேண்டும் தெரியுமா?

போலோ விளையாட்டுக்குக் குறைந்தது ஐந்து ஏக்கர் பரப்பளவுள்ள மைதானம் வேண்டும்.

-கோபி, கிருஷ்ணகிரி


அழப்போவது யார்? 

நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் ஓர் ஆங்கிலப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லித்தருகிறார்கள். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள். உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே, கவனத்தையும் நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள். அடிக்கடி கவலைப்படாதீர்கள். தேவை எனில் கவலைப்படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் 30 நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் எதற்காக கவலை அடைகிறோம் என்பதை சிந்தியுங்கள்.

அதிகாலையில் எழுந்து பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே. தினமும் நிறைய சிரிக்கப் பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்றுத்தரும். 

நிறைய நல்ல புத்தகங்கள் படியுங்கள். எங்குச் சென்றாலும், பிரயாணத்தின் போது ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள். உங்கள் பிரச்னைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மனப்பாரம் கணிசமாகக் குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

உங்கள் குழந்தைகளை உங்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசாக நினையுங்கள் அவர்களுக்கு நீங்கள் தரக்கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும். 

ஆகவே தேவையான விஷயங்களைத் திரும்ப திரும்பச் செய்யுங்கள். தினமும் நல்ல இசை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும். புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். 

பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல.  

3 சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன், ஏதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக நேர்த்தியாகச் செய்யுங்கள்.

உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும். நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.மேற்கண்ட கோணங்களில் அந்தப் புத்தகத்தில் நம்பிக்கை தரும் பல தகவல்கள் உள்ளன.

தகவல்:  கோட்டாறு ஆ.கோலப்பன், நாகர்கோவில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com