Enable Javscript for better performance
பறந்து வரும் மருத்துவச் சேவை- Dinamani

சுடச்சுட

    
    AIR_AMBULANCE_DEMO

    இன்று பெருநகரங்களில் வாழ்பவர்கள் அன்றாடம் பார்க்கும் காட்சி, வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் ஆம்புலன்ஸ்கள். அவசர கதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு வழிவிடவே அனைவரும் விரும்பினாலும், அதற்கு ஏற்ற சூழ்நிலைகள் அமைவதில்லை. இதற்குத் தற்போது மாணவர்கள் புது வழியைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்த வழி தான் என்ன?
    1920-ஆம் ஆண்டு ஆள் இல்லாத போர் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆள் இல்லாத போர் விமானத்தை வைத்து உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது என்பது உலக நாடுகளில் அனைத்திலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவரவர் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இதில் நமது தமிழக மாணவர்களின் பங்கும் அதிகம். 
    ஆபத்து காலங்களில் மக்களுக்கு உதவு நோக்கில் தற்போது அதனைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைத்து unmanned aerial vehicle (UAV)) என்றழைக்கப்படுகின்ற ஆள் இல்லாத அவசர ஊர்தி என்ற அரிய கண்டுபிடிப்பை வடிவமைத்து இருக்கிறார்கள். இதனை வடிவமைக்கக் காரணமானவர் பேராசிரியர் பர்வேஸ் பாஷம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:
    "இந்த ஆள் இல்லாத வாகனம் என்பது பழைய கண்டுபிடிப்பு தான். அதனுடைய மருத்துவச் சேவையை இணைந்தது என்பது தான் மாணவர்களின் புது முயற்சி. இது நோயாளியை சுமந்து செல்லாது. மாறாகத் தேவையான முதலுதவி மருந்துகளை விரைவாகத் தேவைப்படும் இடத்துக்குக் கொண்டு செல்லும். 8 கிலோ எடை கொண்ட இந்த ஆள் இல்லாத ஊர்தி (UAV) இதுவரை பெரும்பாலும் கண்காணிப்பு பணிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதனை உயரே பறக்க விடுவதற்குப் பல்வேறு விதிகளும் நடைமுறையில் உள்ளன. ஆனால் இந்த ஊர்தி முழுக்க முதல் உதவி சேவையைக் கருத்தில் கொண்டு மட்டுமே உருவாக்கப்பட்டது. இது ஒரு மணி நேரத்திற்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். இதனைத் தற்போது 3 கிலோ மீட்டர் வரை ரிமோட் மூலம் இயக்கலாம். இதில் ஜி.பி.எஸ் வசதி உண்டு. 
    சென்னை போன்ற பெருநகரங்களில் அருகில் இருந்தாலும் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத பகுதிகளுக்கு இந்த ஆள் இல்லாத ஊர்தி மூலம் ஆபத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவலாம். பறந்து பறந்து படம் பிடிக்க அதிகம் பயன்பட்டு வந்த ஆள் இல்லாத ஊர்தி (UAV) இனி மனித உயிர்களைக் காப்பாற்றும் சேவை செய்ய உதவும். 
    இதிலுள்ள முதல் உதவி பெட்டியை யார் வேண்டுமானாலும் கையாள முடியும். எப்படி சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோக்களும் அதிலேயே இருக்கும். வரும் காலங்களில் இதில் என்னனென்ன வசதிகளை மேம்படுத்த முடியும் என்பதை மாணவர்கள் ஆய்வாக மேற்கொண்டுள்ளார்கள்'' என்றார். 
    -ராஜன்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai