போதிமரம்

உங்கள் சந்தோஷத்தை, வெளி விஷயங்களை உங்கள் செல்வத்தில் தேடாதீர்கள். பதவியில் தேடாதீர்கள்.

360 டிகிரி
உங்கள் சந்தோஷத்தை, வெளி விஷயங்களை உங்கள் செல்வத்தில் தேடாதீர்கள். பதவியில் தேடாதீர்கள். ஏன் உங்கள் உடல் நலத்தில் கூடத் தேடாதீர்கள். உங்கள் சந்தோஷம் உங்களுக்குள்ளிலிருந்து, உள் மன நிறைவிலிருந்து உங்கள் உள்ளார்ந்த தகுதியில் இருந்து வருகிறது தெரிந்து கொள்ளுங்கள்.
 என்னையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். நான் ஆழ்ந்த மனிதாபிமானம் இல்லாதவனோ, எளிதில் எல்லோரையும் நண்பர்களாக ஆக்கிக் கொள்ளும் இங்கிதம் தெரியாதவனாக இருந்திருந்தால், திபெத்தில் என் அரசு ஒரு முடிவுக்கு வந்த பிறகு நான் அகதியாக நாடு நாடாகச் சுற்றிய என் காலமும் நல்வாழ்வும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.
 நான் ஒன்றும் இல்லாதவனாக, வீசி எறியப்பட்டவனாக நின்றிருப்பேன்.
 நான் திபெத்தில் தலாய்லாமாவாக இருந்த போது மக்கள் உள்ளத்தில் விசுவாசம் இருக்கிறதோ இல்லையோ, என்னை மிகவும் மதித்தார்கள். அந்தப் பதவிக்காக, அந்த அரசியல் அதிகாரத்திற்காக மட்டும் தான் அப்பொழுது மதிக்கப்பட்டேன் என்றால் எனக்கு இப்பொழுது மதிப்பிருக்காது. நான் இப்பொழுதும் மதிக்கப்படுகிறேன் என்றால் நான் இந்த மாபெரும் மானுட உலகத்தின் ஓர் அங்கம் என நான் உணர்ந்திருக்கிறேன். அதற்கேற்ப வாழ்கிறேன். இந்த ஓர் உணர்வு போதும். நீங்கள் எங்கிருந்தாலும் மதிக்கப்படுவீர்கள். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
 எல்லாம் உங்கள் நாடாயிருக்கும். எல்லாம் உங்கள் ஊராயிருக்கும். எல்லோரும் உங்கள் சகோதர, சகோதரிகளாக இருப்பார்கள். ஜன சமூகத்தில் நீங்கள் மகிழ்ச்சியான ஒரு ஜீவனாக இருப்பீர்கள்.
 உங்களின் உள் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். மனிதநேயம் கொண்டர்களாக இருங்கள்.
 மகிழ்ச்சியின் சாவி இதுவே.
 - தலாய்லாமா.
 - தொகுப்பு: தங்க.சங்கர பாண்டியன், ஆதம்பாக்கம்
 நகரங்களுக்குக் குடி தண்ணீர் விநியோகம் செய்த முதல் இந்திய நகராட்சி சென்னை நகராட்சி தான். 1872-ஆம் ஆண்டு ரெட்ஹில்ஸ் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து விநியோகித்தது.
 - மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி
 காண்டாமிருகம் எதிரிகளைக் கொம்பினால் தாக்குவது இல்லை. பற்களினாலேயே கடிக்கிறது.
 -ஆர்.ஜெயலெட்சுமி, மதுரை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com