விஜய் ஆண்டனிக்கு ரம்யா ஜோடி

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் "தமிழரசன்'.
விஜய் ஆண்டனிக்கு ரம்யா ஜோடி

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் "தமிழரசன்'. "திமிரு பிடிச்சவன்' படத்துக்குப் பின் மீண்டும் இதில் போலீஸ் வேடமேற்று நடிக்கிறார் விஜய் ஆண்டனி. எஸ்.என்.எஸ். மூவீஸ் நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி இப்படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வந்தது. விஜய் ஆண்டனிக்கு கதையில் ஜோடி யார்? என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.
 இந்த நிலையில் ரம்யா நம்பீசன் இப்படத்தின் கதாநாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே "சைத்தான்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். இப்போது முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் சோனுசூட் நடிக்கிறார். பூமிகா, யோகி பாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com