சுடச்சுட

  

  பேய் சீஸனில் அடுத்த வரவு "பயம் உன்னை விடாது'. ராதா திரைக்கோணம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை இளஞ்செழியன் இயக்கி நடிக்கிறார். பேபி பி.எம். அபிக்ஷô, இமான் அண்ணாச்சி, சிவ செந்தில்குமார், செல்வம், பொழிலன், சுலக்ஷனா, செந்தில், ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபல ஓவியர் ஒருவரால் ஓவியம் வரையப்படுகிறது. அந்த ஓவியம் நல்ல முறையில் விற்பனையாகிறது. மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. திடீரென்று அந்த ஓவியம் அழிக்கப்படுகிறது. இதனால் பரபரப்பு நிலவுகிறது. அந்த ஓவியம் ஒரு பேயின் உருவம் என்று வதந்தி பரவுகிறது. இந்த சம்பவத்துக்குப் பேயின் லீலையா... இல்லை ஆசாமியின் சாபமா... இதை அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதே கதை. ஊட்டி, சிதம்பரம், பிச்சாவரம், விருத்தாசலம், சின்ன சேலம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அசுரன் ஒளிப்பதிவு செய்கிறார். தயாளன் இசையமைக்கிறார். பழனிவேல் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai