சுடச்சுட

  
  sk7

  மூவிங் பிரேம்ஸ்  பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கள்ளபார்ட்'. கதாநாயகனாக  அரவிந்த்சாமி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார்.  ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ்,  பேபி மோனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராஜபாண்டி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""இது ஒரு உளவியல் கதை. அதை படமாக்குவதில் மிகுந்த சிரமம். அதை வடிவமைப்பதிலும் பிரச்னைகள். எல்லாவற்றையும் சரியாக கொண்டு வந்துள்ளோம்.

  அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற  கதாபாத்திரம். படம் முழுமைக்கும் அவர் தோள்களில்தான் பயணம் செய்யும். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ரசிகர்களுக்கு  பிரமிப்பை ஏற்படுத்தி விடும். இந்தப் படம் அவருக்கு  சிகரமாய் இருக்கும்.'' படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது என்றார். ஒளிப்பதிவு - அரவிந்த்கிருஷ்ணா. இசை - நிவாஸ் கே.பிரசன்னா. வசனம் -  ஆர்.கே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai