சுடச்சுட

  
  sk8

  லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் தேவந்தி. பணியில் இருந்து விடைபெற்ற பின்னர் சினிமாவில் நடித்தார்.  "வீரசேகரன்' படத்தில் அறிமுகமானவர், அதைத் தொடர்ந்து "என்றென்றும் புன்னகை' ,"வெண்ணிலா வீடு" ,"அம்மாவின் கைப்பேசி"," நினைத்தது யாரோ", "காதலுக்கு கண்ணில்லை' உள்ளிட்ட பல  படங்களில்  நடித்து முத்திரை பதித்தார். 

  "இளவரசி","முந்தானை முடிச்சி" உள்ளிட்ட தொடர்கள் மூலமாகச் சின்னத் திரையிலும் முத்திரை பதித்துள்ள இவர், தற்போது குடும்பத் தலைவிகளுக்கான மிஸஸ் இந்தியா 2019-ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற்றுள்ளார். இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் இவர் சிறப்பு இடத்தை பிடித்து போட்டியில் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 3 பேர் கலந்து கொண்டனர்.  
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai