கனடா இசைக்குழுவுக்கு இமான் வாழ்த்து

கனடா இசைக்குழுவுக்கு இமான் வாழ்த்து

இசைக்குத் தேசங்கள் மாநிலங்கள் என்ற பேதம் கிடையாது. இசையால் எந்த தேசத்தில் இருக்கும் இதயங்களையும் ஒரு புள்ளியில் இணைக்க முடியும். அப்படியான இசையால் பலரையும் க

இசைக்குத் தேசங்கள் மாநிலங்கள் என்ற பேதம் கிடையாது. இசையால் எந்த தேசத்தில் இருக்கும் இதயங்களையும் ஒரு புள்ளியில் இணைக்க முடியும். அப்படியான இசையால் பலரையும் கவர்ந்திழுத்த கனடா இசைக்கலைஞர்கள் "சப்தஸ்வரங்கள் 2' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர்.
 கனடாவில் யுனிவர்செல் வோக்கல் அமைப்பை நிறுவி தமிழ் கலைஞர்களை ஊக்குவித்து வருபவர் ரூபன்ராம். யுனிவர்செல் வோக்கலின் இந்திய ஒருங்கிணைப்பாளர் துஷ்யந்தன் மற்றும் பாடகர் மகாலிங்கம் விழாவிற்கு ஏற்பாடு செய்தனர்.
 இசையமைப்பாளர்கள் டி.இமான், தினா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இமான் பேசும் போது..."இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. யுனிவர்செல் வோக்கல் அணிக்கு வாழ்த்துகள். கனடாவில் நான் இரண்டு இசை ஆல்பம் வெளியிட்டு இருக்கிறேன் . கனடா எனக்கு நிறைய கௌரவம் கொடுத்திருக்கிறது. தமிழ் இருக்கை அமைப்பிற்கான அம்பாசிடராக இருக்கும் பெருமையையும் பெற்றிருக்கிறேன். அங்குள்ள திறமையாளர்கள் இங்குள்ளவர்களோடு இணைந்து இப்படி ஒரு ஆல்பத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.இதுபோல் இன்னும் நிறைய ஆல்பங்கள் அவர்கள் பண்ண வேண்டும். மொழியை உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அழகாக இருந்தது. இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com