ஆப்பிரிக்க நாடோடிக்கதை: எல்லோரும் வேலைக்காரர்களே!

ஆப்பிரிக்காவை ஆண்டு வந்த நீக்ரோ மன்னரான காமரா என்பவன் மிகவும் தற்பெருமை கொண்டவன். யாருக்கும் தலை வணங்காதவன். கொடியவன். அதனால் அவனின் சிறு கட்டளையைத் கூட வீரர்கள் மிகவும் கவனத்துடன்
ஆப்பிரிக்க நாடோடிக்கதை: எல்லோரும் வேலைக்காரர்களே!

ஆப்பிரிக்காவை ஆண்டு வந்த நீக்ரோ மன்னரான காமரா என்பவன் மிகவும் தற்பெருமை கொண்டவன். யாருக்கும் தலை வணங்காதவன். கொடியவன். அதனால் அவனின் சிறு கட்டளையைத் கூட வீரர்கள் மிகவும் கவனத்துடன் நிறைவேற்றி வந்தனர்.

ஒரு நாள் அவன் தன்னை வளர்த்து ஆளாக்கிய கிழவன் புகாபரிடம் "எல்லா மக்களும் எனக்கு வேலைக்காரர்கள்' என்று ஆணவத்தோடு சொன்னான்.

அதற்கு புகாபர் ""எல்லா மனிதர்களுமே ஒருவருக்கு ஒருவர் வேலைக்காரர்கள் தாம்''  என்றார்.

இதைக் கேட்ட அரசன் கோபத்தோடு, ""அப்படியானால் நான் உனக்கு வேலைக்காரனா? நீ சொன்னதை மெய்ப்பிக்க வேண்டும். இன்று சூரியன் மறைவதற்குள் என்னை நீ உன் விருப்பப்படி வேலை செய்ய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் உனக்கு 100 மாடுகளைப் பரிசாகத் தருகிறேன்'' என்று கத்தினான்.

""ஏற்றுக்கொள்கிறேன்'' என்றார் புகாபர் அமைதியாக. மிகவும் முதியவரான புகாபர் கைத்தடி ஒன்றைத் தரையில் ஊன்றியபடியே அங்கும் இங்குமாக நடந்தார்.

வாசலில் ""ஐயா! இங்கு ஏழைக்குப் பிச்சை போடுங்கள்'' என்று குரல் ஒலித்தது.
அரசனைப் பார்த்து, ""அந்தப் பிச்சைகாரனுக்கு ஏதேனும் உணவு போட அனுமதி தாருங்கள்'' என்றார் புகாபர்.

அரசனும் ""சரி போட்டுவிட்டு வா'' என்றான்.

புகாபர் இரண்டு கைகளாலும் உணவுத் தட்டைப் பிடித்துக் கொண்டு, அதே சமயம் கைத்தடியையும் ஊன்றிகொண்டு அரசனைக் கடந்து சென்றார்.

திடீரென்ற அவர் கையிலிருந்த தடி நழுவித் தரையில் விழுந்தது. உணவுத் தட்டை விட்டு விட்டு கீழே விழுந்து விடுபவர் போல இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆடினார் அவர்.

""அரசே! சீக்கிரம் கைத்தடியை எடுத்து என் கையில் கொடுங்கள். இல்லையேல் நான் விழுந்து விடுவேன்''  என்று அலறினார் அவர். 

அரசன் எதும் சிந்திக்காமல் அந்தத் தடியை எடுத்துப் புகாபரிடம் தந்தான்.

புகாபர் சிரித்துக்கொண்டே ""பார்த்தீர்களா அரசே! எல்லா மனிதர்களும் ஒருவர் மற்றவர்களுக்கு வேலைக்காரர்கள் தாம். நான் அந்த பிச்சைக் காரனுக்காக வேலை செய்கிறேன். நீங்கள் எனக்காக வேலை செய்கிறீர்கள். எனக்குத் தருவதாக சொன்ன 100 மாடுகளை இந்தப் பிச்சைக் காரனுக்குத் தந்து விடுங்கள்'' என்றான்.

அவர் கெட்டிக்காரத் தனத்தை புகழ்ந்த அரசன், அன்று முதல் அவரைத் தனக்கு அறிவுரை கூறுபவராக வைத்துக்கொண்டான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com