புது டிரெண்ட்;  செல்பிக்கு பரிசு!

முதல் தலைமுறை வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அனைவரும் கட்டாயம் வாக்கு அளிக்க வேண்டும் என இந்தியா முழுவதும் பல்வேறு வகையில்
புது டிரெண்ட்;  செல்பிக்கு பரிசு!

முதல் தலைமுறை வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அனைவரும் கட்டாயம் வாக்கு அளிக்க வேண்டும் என இந்தியா முழுவதும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதிலிருந்து ஒரு படி மேலாக புதிய திட்டம் ஒன்றை அறிவித்தது மிசோரம் மாநில தேர்தல் ஆணையம். 

ஓட்டுப்போட்ட கையுடன் வாக்குசாவடிக்கு வெளியே வந்து ஒரு செல்பி எடுத்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படத்திற்கு 7000 பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது. இந்தத் தொகுதியில் மொத்தம் 7,84,405 வாக்காளர்கள் உள்ளனர். 

அதில் ஆண்கள் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.81 லட்சம்தான். ஆனால் 4.02 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்த மக்களவை தேர்தலில் முதல் முறையாக 52,556 பேர் வாக்களித்தனர்.

1175 வாக்கு பதிவு மையங்களில் 117 மையங்களில் பெண்கள் வாக்களிக்க ஏதுவாக பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். முதல் முறை வாக்களிக்க இருக்கும் நபர்களின் எண்ணிகையை அதிகரிக்கவே இந்த பரிசுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செல்பி போட்டிக்கான விதிமுறைகளும் ரொம்ப சிம்பிள்தான். முதல் முறையாக வாக்களிப்பவர்கள் வாக்குச்சாவடியில் இருந்து ஒரு செல்பி, பின்னர் தாங்கள் வாக்களித்தற்கு அடையாளமாக விரலில் வைக்கப்பட்ட அடையாள மை அல்லது வாக்காளர் அடையாள அட்டையுடன் செல்பி எடுத்து தேர்தல் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பினால் போதும். இதற்கான ட்விட்டர் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் புகைப்படத்தைப் பதிவு செய்யலாம் 

சிறந்த செல்பி எடுத்து அனுப்பியவர்களின் படங்களில் சிறந்த 3 படங்களுக்கு தேர்தல் ஆணையம் பரிசு வழங்கும்.  முதல் சிறந்த புகைப்படத்துக்கு ரூ.7,000, இரண்டாவது சிறந்த படத்துக்கு ரூ.5,000ம், 3வது படத்துக்கு ரூ.3,000 மும் பரிசாக வழங்குவதாக அறிவித்தது.  கடந்த வாரம் தேர்தல் ஆணையத்திற்கு வந்த புகைப்படங்களை ஆராய்ந்த தேர்தல்அதிகாரி குந்த்ரா முதல் பரிசை  கல்லூரி மாணவி பியாக் லியானாவுக்கும், இரண்டாவது பரிசை  ரின்லுவாவிற்கும், மூன்றாவது பரிசு தின்தாராவிற்கும் வழங்கினார். 

தொழில்நுட்பம் என்பது நம்முடைய வாழ்வில் இரண்டற கலந்து விட்டது என்பதற்கு உதாரணம் தான் செல்பி போட்டி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com