360 டிகிரி

360 டிகிரி

சி.சு செல்லப்பா தொலைக்காட்சி பார்ப்பாரா?

மதுரை பழங்காநத்தம் நீலகண்டன் கோயில் தெருவிலுள்ள மகன் வீட்டில் சி.சு.செல்லப்பா தங்கியிருக்கையில் சந்திக்கச் சென்றேன். வீட்டில் இல்லை பக்கத்து வீட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கு போன போது தனிமையில் தொலைக்காட்சி பார்ப்பதில் கவனமாக இருந்தார். நான் வந்ததைக் கூட கவனிக்கவில்லை.

இவரும் தொலைக்காட்சி பார்ப்பாரா?

நான் வந்தது கூடத் தெரியாமல் அப்படி என்ன உன்னிப்பாக கவனிக்கிறார்? அருகில் போனபோது தான் தெரிந்தது. சாணக்கியரின் வரலாற்றுத்தொடர் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது.

மானிட வாழ்வின் சரித்திரத்தை இலக்கியமாக்கி கொண்டிருப்பவர்களுக்கு, ஒரு காலத்தையே வடிவமைத்த ராஜ தந்திரியின் வரலாறு முன்பே தெரிந்திருந்தாலும், அதை எப்படித் தொடராக்கியிருக்கிறார்கள் என்ற ஆய்வில் கவனித்துக் கொண்டிருக்கலாம்.

இந்தத்தொடரை இம் மாதிரித் தொடர்களை என்ன வேலை இருந்தாலும், தள்ளிப் போட்டுப் பார்ப்பவன் தான் நானும். இவ்வாரம் இவரைப் பார்ப்பதற்காகவே அதை விட்டு வந்தால், இங்கும் பின் தொடர்ந்து வந்துவிட்டதே!

திரும்பி என்னைப் பார்த்தவர் பேசாமல் உட்காரச் சொல்லி கையை காட்டினார். தொடர் முடிந்த பிறகு தான் பேச முடிந்தது.

இவ்வளவு உன்னிப்பாக தொலைக்காட்சித் தொடரைக் கவனித்தார் சி.சு.செல்லப்பா.

(அகம் பொதிந்தவர்கள் நூலில் எழுத்தாளர் கர்ணன் எழுதியது)
-தங்க.சங்கரபாண்டியன்

வெப் சில தகவல்கள்

✽    வெப்பில் 1992-ஆம் ஆண்டு முதல் புகைப்படம் ஏற்றப்பட்டது. அது ஒரு பேண்ட் குழுவினரின் படம்.
✽    5 பிரபலமான வெப் சைட்டுகள் கூகுள், யூடியூப், பேஸ்புக், பெய்டு, விக்கிபீடியா. 
✽    ரேடியோ உலகம் முழுவதும் பரவ 38 ஆண்டுகள் ஆனது.
✽    தொலைக்காட்சி 13 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
✽    ஆனால் வெப், 4 ஆண்டுகளில் 50 மில்லியன் மக்களை சென்றடைந்துவிட்டது.

-ராஜிராதா, பெங்களூரு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com