உடுக்கை

வலைதளங்கள் மூலம் இளைய சமுதாயத்தினருக்கு ஏற்படும் தீமைகளைச் சொல்ல வரும் படம் "உடுக்கை'.  
உடுக்கை


வலைதளங்கள் மூலம் இளைய சமுதாயத்தினருக்கு ஏற்படும் தீமைகளைச் சொல்ல வரும் படம் "உடுக்கை'.  
பாம்பன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பி.எம்.ஆர். ஃபிலிம் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விபின், உமர், சஞ்சனா சிங், அங்கிதா, லட்சுமி, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாலாமித்ரன் எம்.ஆர்.  
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீக மாற்றங்கள், பொருளாதார நெருக்கடி, அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, துரித உணவு முறை என எல்லாமே மனித வாழ்வின் கோபத்தை சுமந்துக் கொண்டுதான் நிற்கின்றன. இதை விட ஒரு கொடுமை.. இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்கள்.  குறிப்பாக, சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகரித்து விட்டது.
சக மனிதனிடம் கூட பேசாத காலம் உருவாகி விட்டது.
பிறந்த நாள் வாழ்த்துகள் தொடங்கி, அன்றாடம் பரிமாறப்படும் செய்திகள் வரை  எல்லாமே தொழில்நுட்பத்தை நம்பியே இருக்கின்றன. அதிவேக வாழ்வியல் சூழலில் தொழில்நுட்பத்தின் பங்கு, அதிலும் குறிப்பாக தொடர்பு தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சி பல உயரிய நன்மைகளை தந்திருக்கிறது என்ற போதிலும் அதனோடு சேர்ந்தே, சில பெரும் ஆபத்துகளும் நம்மை வந்துடைந்து இருக்கிறது. இயல்பான தகவல் பரிமாற்றம் எப்படி மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது என்பதை புதுமையான பரிமாணத்தில் சொல்லுவதே கதை. படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com