இங்கும் ஒரு கீழடி!

இந்த மலையில் உள்ளது கொழுந்தீஸ்வரர் கோயில். இது 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது.
இங்கும் ஒரு கீழடி!

இந்த மலையில் உள்ளது கொழுந்தீஸ்வரர் கோயில். இது 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. இங்கே யாழி சிங்கம் போன்ற சிலைகள் பல உள்ளன. குகைக் கோயிலாகவும் உள்ளன.  பலப்பல கல்வெட்டுக்கள் உள்ளன. குலசேகர பாண்டிய மன்னர் காலக் கோயில் என்றும் கூறப்படுகிறது.

இங்குள்ள கல்வெட்டுகள் ஆய்வுக்குரியவை. மலைக்கு கிழக்குப் பகுதி வெட்ட வெளிப்பகுதி. இங்கு எங்குப் பார்த்தாலும் முதுமக்கள் தாழிகள் உள்ளன. இதில் பொன் நாணயங்கள் இருப்பதாக வதந்தி பரவ பலர் பல இடங்களை தோண்டிபார்த்து முதுமக்கள் தாழிகளை உடைத்து பார்த்துள்ளனர். 

எங்கும் முதுமக்கள் தாழிகள் உடைந்து காணப்படுகின்றன. மனித எலும்புகள் மண் பாத்திரங்கள் உடைந்த ஓட்டாஞ்சில்லுகள் எங்கும் சிதறி உள்ளன. தங்கச் காசுகள் ரோமாபுரி நாணயங்களும் கிடைத்துள்ளதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

ஆயிரத்துககும் மேற்பட்ட தாழிகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. கையால் மண்ணை தோண்டினாலே தாழியின் வாய்ப்பகுதி தெரிகிறது.
அண்மையில் ஓரிடத்தில் வெண்கல மனித உருவத்தில் கால் பகுதி கிடைத்து உள்ளதாகவும் தற்போது கோயில் பாதுகாப்பாளர்  வீட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோயிலில் தங்கப்பல்லக்கு இருந்ததாகவும் கொள்ளையர்கள் பல்லக்கை எடுத்துச் செல்ல திட்டமிட்டதை அறிந்தவர்கள் மண்ணில் தோண்டி புதைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்காகவே பல வருடங்கள் தோண்டிப் பார்க்கப்பட்டதாக தெரிகிறது. 

அரசும் ஆய்வாளர்களும் கல்வெட்டுக்களை ஆய்வு செய்யவும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர் வாழ்வை தெரிந்து கொள்ளவும் இப்பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். இதனால் பல சரித்திர செய்திகள் தெரிய வரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com