மிகப்பெரிய சோலார் பூங்கா!

நமது ஊரில் காற்றாலை மின்சாரம் தயாரிப்பு போல் மொராக்கோவில் உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. .
மிகப்பெரிய சோலார் பூங்கா!


நமது ஊரில் காற்றாலை மின்சாரம் தயாரிப்பு போல் மொராக்கோவில் உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. . இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தைக்கொண்டு பாராகுவே போல இரு நாட்டிற்கு மின்சாரம் வழங்கலாம். அதாவது சுமார் 10 லட்சம் குடும்பங்களுக்கு தேவையான மின்சாரத்தை இந்த பூங்காவால் தயாரிக்க முடியும்.

மொராக்கோவின் நூப் குவார்சசேட் என்னும் பகுதியில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவிற்கு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது 3500 கால்பந்தாட்ட மைதானத்திற்கு சமமாகும். இதன்மூலம் 580 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்க முடியும். இவ்வளவு மின்சாரத்தை பெட்ரோல் நிலக்கரி கொண்டு உருவாக்கினால் சுமார் 7,60,000 டன் கரியமிலவாயு உருவாகும். இந்த திட்டம் எத்தனை முக்கியமானது என்பதற்கு இதுவே சாட்சி.

பகல்வேளையில் இந்த உப்பு கொள்கலனில் சூரியக்கதிர்கள் பாய்ச்சப்பட்டு உருக்கப்படும். அதில் தேங்கியுள்ள வெப்பத்தினை இரவில் மின்சாரமாக மாற்றிக்கொள்கிறார்கள். தற்போதைய நிலையில் மொராக்கோ 97% மின்சார உற்பத்தியை மரபுசார் வளங்களைக்கொண்டே பெறுகின்றது. ஆனால் இந்த திட்டம் மூலம் நாட்டின் மின்சார தேவையில் 42 சதவிகிதத்தை சமாளிக்கலாம். 

இனிவரும் காலங்களில் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என இங்கு பணியாற்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இங்கே 2010 -ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் அடுத்த இருபது ஆண்டுகளில் நாட்டின் மின்சார தேவை இருமடங்காகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து தீவிரமாக செயல்பட்ட அந்நாட்டு அரசு உலக வங்கியிடம் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகப்பெற்று இந்த திட்டத்தை துவங்கியது. 

"கிளீன் டெக்னாலாஜி' நிறுவனம் 216 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த சோலார் பூங்காவில் முதலீடு செய்துள்ளது. இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் வளர்ச்சி பாதையினை அமைப்பதுதான் நம்மிடம் இருக்கும் ஒரே வழி என்பதை மொராக்கோ மக்கள் நான்கு புரிந்துகொண்டுவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com