அக்கம்பக்கம்

1952-ஆம் ஆண்டு தாம்பரம் கிறிஸ்துவக்கல்லூரி மாணவர்களிடையே அப்போது ராஜாஜி பேசினார். பேசும் போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போல் இல்லாமல் கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்பில்
அக்கம்பக்கம்

பேச உரிமையில்லையா?

1952-ஆம் ஆண்டு தாம்பரம் கிறிஸ்துவக்கல்லூரி மாணவர்களிடையே அப்போது ராஜாஜி பேசினார். பேசும் போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போல் இல்லாமல் கிறிஸ்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற சொல்லிவிட்டார்.

இவ்வாறு பேசியதற்க பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே எதிர்ப்புத் தோன்றியது.

"விடுதலை'யில் அதன் ஆசிரியர் குத்தூசி குருசாமி காரசாரமான கட்டுரை எழுதிவிட்டார்.

பிரச்னை பெரிதாகி விடுமே என்ற கவலையில் பச்சையப்பன் கல்லூரி முதல்வர், ஒரு கடிதத்தை ராஜாஜிக்கு அனுப்பினார்.

""நீங்கள் கல்லூரியில் மாணவர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். நான் வந்து பேசுகிறேன்'' என்று ராஜாஜி பதில் எழுதிவிட்டார்.

கல்லூரி மாணவர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் ராஜாஜி பேசினார்.

""தன்னுடைய மகன் நன்றாகப் படிக்க வேண்டும். முன்னுக்கு வர வேண்டுமென்று தான் எந்த ஒரு தந்தையும் எண்ணுவார். அதே போல் ஒரு தந்தை என்ற உணர்வில்தான் அப்படிப் பேசினேன். உங்கள் தந்தை , தாத்தா போன்று எனக்கு அப்படி பேச உரிமையில்லையா?'' என்று ராஜாஜி பேசியதும் ஒட்டு மொத்த சூழ்நிலையே மாறிவிட்டது. மாணவர்கள் பெரும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ராஜாஜியின் பெருந்தன்மையைப் பற்றி மறுநாள் "விடுதலை'யில் தலையங்கம் வந்தது. பெரியாரே அந்த தலையங்கத்தை எழுதியிருந்தார். அந்த தலையங்கத்துக்கு பெரியார் சூட்டியிருந்த தலைப்பு "பெரியவர் பெரியரே'

- மயிலை மாதவன்

சிபாரிசுக்கு வருவார்கள்!

காமராஜர் விருதுப்பட்டியில் வசித்துக் கொண்டிருந்த தன் தாயாரைச் சென்னைக்கு வந்து தன்னுடன் தங்குமாறு என்றுமே அழைத்ததில்லை. அவர் வந்து தங்கினால், உறவினர், உற்றவர் என்று பலரும் வந்து சேருவர் அவர்களுக்கென சிபாரிசு என்ற பெயரில் ஏதேனும் செய்ய வேண்டியிருக்கும். அவராகச் செய்யாவிடினும் அவரைச் சுற்றியிருப்பவரிடம் துஷ்பிரயோகம் செய்ய முயலக் கூடும் என்ற காரணத்தால் தன் தாயைச் சொந்த ஊரிலேயே இருக்குமாறு செய்தவர் காமராஜர்.

பத்மவிபூஷண் கதை

ஆர்.கே.லட்சுமணன் "பத்மவிபூஷண்' விருதுக்கு தேர்வானார். பிறகு ஒரு நாள் மத்திய உள்துறை அலுவலகத்திலிருந்து ஒருவர் அவருடைய அலுவலகத்துக்கு வந்தார். அவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விவரத்தை தெரிவித்தார்.

விருதை ஏற்க அவருடைய சம்மதத்தை தெரிந்து கொண்டவுடன் போய்விட்டார். பிறகு ஒரு நாள் அவருக்கு உள்துறை அலுவலகலத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் ""பத்மவிபூஷண் ஏற்க நீங்கள் டில்லிக்கு வந்து போகும் போக்குவரத்து செலவு உங்கள் ஒருவருக்கு மட்டும் தான் கொடுக்கப்படும். உங்கள் மனைவி எளிமையான உடையில் தான் வர வேண்டும். அந்தப் புடவையின் பார்டர் இரண்டு அங்குலத்துக்கு மேல் இருக்கக்கூடாது'' என்று தகவல் இருந்தது.

ஆனால், கடைசியில் லட்சுமண் அந்த விருதை ஏற்க டில்லிக்குப் போக முடியவில்லை. வேறு ஒரு முக்கிய காரணமாக அந்த தேதியில் அவர் ஜெர்மனிக்கு போக வேண்டியதாகிவிட்டது.

லட்சுமண், மொரார்ஜி தேசாயை தாக்கி அடிக்கடி கார்ட்டூன்கள் போட்டார். அதனால் மொரார்ஜிக்கு அவர் மேல் கடும் கோபம். ஒரு நாள் அமைச்சரவையை கூட்டி , அவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்தார். ஆனால் இந்திய அரசியல் சாசனப்படி மக்களுக்கு இருந்த "கருத்து வெளியிடும் சுதந்திரத்தால்' அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com