அதிவேக ரயில்

மனிதனின் தேவைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் எல்லையில்லை. இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு நொடியும் மனிதன் தன் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான். 
அதிவேக ரயில்

மனிதனின் தேவைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் எல்லையில்லை. இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு நொடியும் மனிதன் தன் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட நமக்கு நேரம் மிகவும் முக்கியம்.

சாதாரண ரயில் பயணத்தின் மூலம் 2 மணி 15 நிமிடங்களில் பிரிட்டனில் இருந்து பாரீஸ் செல்ல வேண்டிய தூரத்தை வெறும் 68 நொடிகளில் கடக்கிறது ஒரு அதிவேக ரயில்.

இதில் பயணம் செய்வதே, திகிலும்,சுவாரசியமும் கலந்த புதுவித அனுபவமாக இருக்கிறது என்கின்றனர் இதில் பயணித்த பயணிகள்.முதல் 9.3 கிமீ பூமிக்கு கீழே செல்லுமாறும்,அடுத்த 37.9 கிமீ கடலுக்கு அடியில் செல்லுமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வரும் சுரங்கப்பாதையின் அமைப்பு ஒரு ரோலர் கோஸ்டர் போல் அமைக்கப்பட்டிருந்தாலும், எவ்வித சிரமுமின்றி இடத்திற்கு தகுந்தாற்போல் சுகமாக அழைத்துச் செல்கிறது.

பிரிட்டனில் இருந்து புறப்படும் பயணிகள், பூமிக்கு கீழ்,மேல்,சுரங்கம்,கடல் என ஒவ்வொன்றையும் உணர்வதற்கு முன்பே இறங்கும் இடமான பாரீஸ் வந்தடைகிறார்கள்.

இந்த சாகச ரயிலை ஓட்டும்போதுதான் தான் ஒரு முழுமையான ரயில் ஓட்டுநராக உணர்ந்ததாக பெருமையுடன் கூறும் இதன் ஓட்டுநர் டாஷ் ஸ்பீட் ஒரு பெண் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com