ஆக்ஷன் தேவதைகள்

1976-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வந்த "சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' என்ற சீரியல் மிகப் பிரபலமானது. அதன் அடிப்படையில் 2000-ஆம் ஆண்டு அதே பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது
ஆக்ஷன் தேவதைகள்

1976-ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வந்த "சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' என்ற சீரியல் மிகப் பிரபலமானது. அதன் அடிப்படையில் 2000-ஆம் ஆண்டு அதே பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது. 2003- ஆம் ஆண்டு "சார்லீஸ் ஏஞ்சல்ஸ் புல் திராடில்' என்ற பெயரில் படமும் வெளியானது. சார்லஸ் டவுன்சீட் என்ற முகம் தெரியாத ஒரு நபர், தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்யும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
 அதில் மூன்று பெண் தேவதைகள் பணிபுரிகிறார்கள். ஆண்களுக்கு நிகரான சண்டையிடுதல், சாகசங்கள் புரிதல் என கை தேர்ந்தவர்கள். தற்போது அதன் மூன்றாம் பாகமும் தயார். கிறிஸ்டின் ஸ்டூவர்ட், நயோமி ல்காட், எல்லா பெலென்ஸ்கா ஆகியோர் தேவதைகளாக நடிக்கின்றனர். எலிசபெத் பேங்ஸ் இயக்குகிறார். சோனி பிக்சர்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com