தண்ணீர் வழக்கு

குற்றால அருவியில் ஆங்கிலேயர்கள் குளிக்கும்போது எவரும் அப்பகுதியின் பக்கமே செல்லக்கூடாது என்று அதிசயச்சட்டம் நடைமுறையில் இருந்தது.

குற்றால அருவியில் ஆங்கிலேயர்கள் குளிக்கும்போது எவரும் அப்பகுதியின் பக்கமே செல்லக்கூடாது என்று அதிசயச்சட்டம் நடைமுறையில் இருந்தது.
 குற்றால நாதருக்கு ஆலய பூஜைக்காக அருவி நீரை எடுக்கவும், ஆலய பூஜை நடத்தவும் முடியாத நிலை ஏற்பட்டது.
 ஆலய நிர்வாகத்தினர் அருவியில் அனைவரும் நீராட உரிமைகோரி திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆலய பூஜையை அருவிக்கருகில் நடத்த அனுமதித்ததுடன், ஆங்கிலேயர்கள் நீராடும்போது அவர்களுக்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்படுத்தக்கூடாது என்றும் தீர்ப்பளித்தார்.
 இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அங்கு சர் அர்னால்டு ஒய்ட் தலைமையிலான நீதிபதிகள் குழு, அருவி பொதுவானது - ஆங்கிலேயர்கள் இரண்டு மணிநேரமே குளிக்கலாம். திருவிழாக்காலங்களில் அங்கு ஆங்கிலேயர்கள் நீராடப் போகக்கூடாது என்று தீர்ப்பளித்தார்.
 இந்தத் தீர்ப்பும் மனநிறைவு அளிக்காததால் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 1915- ஆம் ஆண்டு பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகள் அங்கு வழக்கு நடந்தது. பின்னர் பிரிவி கவுன்சில் 1917-ஆம் ஆண்டு முதல் யார் வேண்டுமானாலும் நீராடலாம் ஆனால் ஆதி திராவிடர்கள் இதில் நீராடக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது.
 1938-ஆம் ஆண்டு ராஜாஜி சென்னை மாகாண பிரதமராக இருந்த போது இந்தத் தடையை நீக்கி எல்லோரும் குளிக்கலாம் என்கிற நிலையை ஏற்படுத்தினார்.
 வெ.இறையன்பு எழுதிய ஏழாவது அறிவு முதல் பாகத்திலிருந்து...
 கோ. தமிழரசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com