உதயநிதி ஜோடியாக மேகா

"தடையற தாக்க', "மீகாமன்', "தடம்' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மகிழ் திருமேனி.
உதயநிதி ஜோடியாக மேகா


"தடையற தாக்க', "மீகாமன்', "தடம்' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மகிழ் திருமேனி. அடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை எழுதி இயக்குகிறார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கியுள்ளன. படப்பிடிப்புக்கான் வேலைகள் ஆயத்தமாகியுள்ளன. உதயநிதி ஸ்டாலின் ஜோடி மற்றும் இதர நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வந்தது. ஜோடியாக நடிப்பதற்குப் பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே உதயநிதி நடிப்பில் "சைக்கோ' மற்றும் "கண்ணை நம்பாதே' ஆகிய 2 படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com