காவியன்

உலக நாடுகளில் அதிகளவில் துப்பாக்கி வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.
காவியன்


உலக நாடுகளில் அதிகளவில் துப்பாக்கி வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அங்கு நடக்கும் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்படும் பெரும்பாலும் இந்தியர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "காவியன்'. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை சாரதி எழுதி இயக்குகிறார். ஷாம், ஆத்பியா, சீதேவி குமார், சீநாத், ஜெனிபர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஜேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஷ்யாம் மோகன் இசையமைக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மென்மை, துரோகம், வன்மம், குற்றம் எல்லாம் இருந்துக் கொண்டே இருக்கிறது.  கொஞ்ச சதவீதம் கூடி  குறைந்து இருந்தால் நாமே நல்லவன், கெட்டவன் என்று பிரித்துச் சொல்லி விடுகிறோம்.  கெட்டவனாக இருந்தவனை நல்லவனாக ஆக்குவதற்கான  முயற்சியும், அவனை வேறு திசைக்குக் கொண்டு போகிற முயற்சிகளும் நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படி நகரும் சில கதாபாத்திரங்களைப் பற்றிய கதை இது.'' இப்படத்தை எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.வி. சபரீஷ் வெளியிடவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com