சுடச்சுட

  
  sk14

  காட்டுப்பகுதியில் நடக்கும் கதையாக உருவாகிறது "அடவி' . வினோத் கிஷன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரமேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். சரத் ஜடா இசை. "அடவி' கதை எழுதித் தயாரிக்கும் கே.சாம்பசிவம் படம் பற்றி கூறும்போது, 

  ""காட்டுப்பகுதியில் தங்குமிடங்கள் கட்ட முயற்சிக்கும் நிறுவனத்துக்கும் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை. இயற்கை என்பது எல்லா உயிரினங்களுக்குமானது என்பதைச் சொல்லுவதே திரைக்கதை. கோத்தகிரியிலிருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள நெட்டுக்கல் காட்டுப்பகுதி கிராமத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்பகுதி வனவிலங்குகள் அதிகம் நடமாடும் இடம். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்த முடியாது. ஒருமுறை படப்பிடிப்பு நடக்கும் போது காட்டு யானைகள் படக்குழுவினர் வந்த காரை சூழ்ந்துகொண்டன. யானைகள் அங்கிருந்து செல்லும்வரை காத்திருந்து அதன்பிறகு காரை எடுத்துக்கொண்டு வந்தோம்'' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai