சுடச்சுட

  
  sk10

   

  பிரதமர் நரேந்திர மோடியின் ஆரம்பகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள குறும்படம் "சலோ ஜீத் ஹைன்' (கம் லெட்ஸ் லைவ்). மங்கேஷ் ஹடவாலே எழுதி இயக்கி தயாரித்துள்ள இந்தக் குறும்படம் கடந்த 2018- ஆம் ஆண்டு வெளியானது. 

  32 நிமிடங்களைக் கொண்ட இந்தக் குறும்படத்தின் கதை ஒரு சிறுவன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிந்துகொண்டு, தனது வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடலில் இறங்குகிறான் என்பதே. ராஜீவ் சக்சேனா, தைரியா தர்ஜி, தேவ் மோடி, தீப்தி அவ்லான் மற்றும் கின்னஸ் பக்ரு ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் "சலோ ஜீத் ஹைன்' குடும்ப நலன் கருதிய சிறந்த குறும்படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளது.

  இதைத் தொடர்ந்து இந்த வெற்றியை பகிரும் வகையில் இந்தக் குறும்படத்தைத் தமிழகத்தில் திரையிடுவதற்குப் பெரும் பங்களித்த "டிவோ' நிறுவனம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

  அதில், "பிரதமர் நரேந்திர மோடியின் குழந்தைப் பருவத்தின் குறும்படத்துக்குக் குடும்ப மதிப்புகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது என்பதைத் தெரிவிப்பதிலும், மேலும் குறும்படத்தைத் தமிழகம் முழுவதும் விநியோகிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதைச் செய்ய வாய்ப்பளித்தமைக்குத் தயாரிப்பாளர் மகாவீர் ஜெயின் மற்றும் ஆனந்த் எல் ராய் ஆகியோருக்கும், விநியோகத்தில் அனைத்து ஆதரவையும் தந்த லைகா புரொடக்ஷன்ஸூக்கும் எங்களுடன் துணை நின்ற கிருஷ்ணமூர்த்திக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.' என பகிர்ந்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai