இமாசலப்பிரதேசம்

1971-ஆம் ஆண்டு ஜனவரி-25ஆம் தேதி தனி மாநிலமானது இமாசலப்பிரதேசம். இந்தியாவின் 18வது மாநிலம் இமயமலை சார்ந்த பகுதிகளைக் கொண்டுள்ளதால் இமாசலப்பிரதேசம் ஆனது.
இமாசலப்பிரதேசம்


1971-ஆம் ஆண்டு ஜனவரி-25ஆம் தேதி தனி மாநிலமானது இமாசலப்பிரதேசம். இந்தியாவின் 18வது மாநிலம் இமயமலை சார்ந்த பகுதிகளைக் கொண்டுள்ளதால் இமாசலப்பிரதேசம் ஆனது. இதனை கடவுளின் பூமி எனவும் கூறுவர். ஆனால் இதற்கு இப்போது உத்தரகாண்ட் மாநிலம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காரணம்.அதிலும் இமயமலை சார்ந்த பகுதிகள் தான் உள்ளன.

இமாசலப்பிரதேசத்தில் உணா, காங்கரா, குல்லு, சம்பா, சிம்லா, பிளாஸ்பூர் உட்பட மொத்தம் 12 மாவட்டங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் குப்தர்களும், சுல்தான்களும் ஆண்ட பூமி. மிகப்  பழங்குடியினராக கோல்ஸ், முர்டாஸ், பிதாலாஸ் மற்றும் கிரடஸ் இன மக்கள் கூறப்படுகிறார்கள்.

ஏப்ரல்-ஜுன் வெயில் காலம், நவம்பர்-மார்ச் குளிர்காலம். இது சமயம் கடும்பனிச்சாரல் உண்டு. கடும்பனிக்காலம் மற்றும் மழைக்காலங்களில் பல சாலைகள் அடர்த்தியான பனி மற்றும் மண்சரிவு ஆகியவற்றால் மூடப்படுவது உண்டு!

இமாசலப்பிரதேசத்தின் முக்கிய தொழில் விவசாயம் தான். இதனால் மாநிலத்தின் 62 சதவிகிதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
இமாசலப்பிரதேசத்தில் குறுகிய ரயில்பாதை மற்றும் அகல ரயில் பாதை என இரண்டுமே உள்ளது.

பதான் கோட்டிலிருந்து இமாசலப்பிரதேச நகரங்களுக்கு வரும் ரயில் பாதை ரம்யமானது. டெல்லியிலிருந்து அகல ரயில் பாதை வசதி உள்ளது.

இமாசலப்பிரதேசம்-இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்த முதல் மாநிலம்.  இந்தியாவில், தற்போது ஆப்பிள் சீசன் நடை பெறுகிறது. இந்தியாவில் காஷ்மீர் ஆப்பிள்கள் புகழ் பெற்றவை என்றாலும், இமாசலப்பிரதேசம் தான் "ஆப்பிள் மாநிலம்' என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. ஆப்பிள் நன்கு விளைவதற்கு பனி சார்ந்த குளிர்ச்சியான நிலையும், மலைப்பாங்கான பகுதிகளுமே தேவையாகும். இமாசலப்பிரதேசம் என்ற சொல்லே, பனி சூழ்ந்த மலைகள் உள்ள மாநிலம் என்பதைக் குறிக்கிறது. 

இமாசலப்பிரதேச மாநில அரசும், ஆப்பிள் விவசாயம் மற்றும் வர்த்தகம் சிறப்பாக நடைபெற அனைத்து வகைச் சலுகைகளையும் செய்து தருகிறது. கடுமையான பனிக்காலத்தில் ஆப்பிள் மரங்கள் முழுமையாக கருகி விடுகின்றன. பனிக் காலம் முடிந்தவுடன் தான், மீண்டும் துளிர்விடத் துவங்குகின்றன.  பனிக்காலத்தில் பனிப்பொழிவினைக் காண, சுற்றுலா செல்பவர்கள் ஆப்பிள் மரத்தின் இலை களைக் கூட காண முடியாது. இமாசலப்பிரதேச மாநில அரசு, ஆப்பிள் ஜூசை அனைத்து மாநிலங்களிலும் விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com