அறிவியல் கதை

பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த நிறுவனம் ராவுத்தர் பிலிம்ஸ். 80-90 காலகட்டங்களில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்த நிறுவனம் பின்னர் சினிமா தயாரிப்பதை கைவிட்டு விட்டது
அறிவியல் கதை

பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த நிறுவனம் ராவுத்தர் பிலிம்ஸ். 80-90 காலகட்டங்களில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்த நிறுவனம் பின்னர் சினிமா தயாரிப்பதை கைவிட்டு விட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது தயாரிப்பில் இறங்கியுள்ள இந்நிறுவனத்தின் தயாரிப்பாக வெளிவரவுள்ளது "எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்' புதுமுகங்கள் ஆரி, ஷாஷூவி பாலா, அபுபக்கர் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர்.
 கவிராஜ் எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""நான் சின்னத்திரையில் இருந்து வந்தவன். இந்தக் கதை கொஞ்சம் வித்தியாசமானது. தமிழுக்கு புதுசு. அதைப் புரிந்து கொண்டு நடிக்க வந்த ஆரிக்கும், தயாரிக்க வந்த அபுபக்கருக்கும் நன்றி. பொதுவாக "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் கடவுள் என்று தான் கூறுவார்கள். ஆனால், இந்த படம் அறிவியல் சார்ந்த படம். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகத் தான் இருந்து வருகிறது. அதேபோல், வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கான பதிலாக இந்தப் படம் இருக்கும்'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com