யானைகள்: நீங்கள் அறியாத தகவல்கள்!

யானை வால் என்பது கைகளைப் போன்றது. மனிதன் நடப்பது போல் பெரிய யானைகளின் வாலை பிடித்துக் குட்டி யானைகள் நடக்கும். 
யானைகள்: நீங்கள் அறியாத தகவல்கள்!

யானைகள் இரண்டு வகைப்படும். 
1.ஆப்பிரிக்கன் யானை 
2. ஆசிய யானை 
* ஆசிய வகையிலான பெண் யானைகளுக்குத் தந்தம் இருக்காது
* ஆசிய யானைகளை விட ஆப்பிரிக்கன் யானைகள் உருவத்தில் பெரிய தாகும். 
* புதிதாகப் பிறந்த யானை குட்டியின் எடை 200 பவுண்டுகளுக்கு மேல் இருக்கும். (அதாவது 30 குழந்தைகளின் எடைக்குச் சமமாக இருக்கும்)
* யானை தனது தும்பிக்கையால் சுமார் 350 கிலோ வரை எடையைத் தூக்க முடியும். அதாவது 5 ஆண்களின் எடை. 
* யானையின் தந்தம் வெள்ளை நிற பொருளால் ஆனது. மூன்றில் ஒரு பகுதி தந்தம் யானையின் உடலுக்குள் இருக்கும். 
* மனிதர்களைப் போல் யானைகளுக்கும் கண் இமைகள் உண்டு. 
* யானைகளுக்கு தேனீக்களை பிடிக்காது.
* யானை வால் என்பது கைகளைப் போன்றது. மனிதன் நடப்பது போல் பெரிய யானைகளின் வாலை பிடித்துக் குட்டி யானைகள் நடக்கும். 
* மனித உடலில் இருக்கும் தசைகளை விட யானையின் தும்பிக்கையில் அதிகத் தசைகள் உள்ளன. 
* முன் பகுதி மற்றும் அடிப்பகுதியை தவிர மற்ற பாகங்களில் உள்ள தோல் மென்மையாக இருக்கும். அதனால் வெயிலினால் யானைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.
* வெப்பத்தினால் ஏற்படும் அலர்ஜியில் இருந்து தற்காத்துக் கொள்ள யானைகள் அதன் மீது மண்ணைப் பூசிக் கொள்கிறது. 
* யானை தன் குட்டியை ஈன்றெடுக்க 22 மாதங்கள் ஆகிறது. 
* யானைகள் வேர்க்கடலை சாப்பிடாது. ஆனால் புல், இலைகள், மூங்கில், வேர் தண்டு போன்றவற்றை உட்கொள்ளும். வாழைப்பழம் மற்றும் கரும்பு யானைக்குப் பிடித்தமான உணவுகள் 
* யானைகள் பெரிதாக இருந்தாலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அதிகமாக நகர்பவை. ஏனெனில் யானைகளின் பாதம் பஞ்சு போன்ற மென்மையான அமைப்பினால் ஆனது. 
* யானைகள் சுவாசிப்பது துதிக்கையினால்தான் என்றாலும் வாசனை அறிவது மட்டும் வாயில்தான். யானைக்கு வாயில்தான் வாசனை நரம்புகள் இருக்கின்றன.
* யானை, மணிக்கு 32 கி. மீ வேகத்தில் ஒடும். எல்லா யானைகளுக்குமே கிட்டப்பார்வை உண்டு. தூரத்தில் இருப்பதை அவற்றால் தெளிவாக பார்க்க முடியாது. 
-கலைச்செல்வி, மதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com