அக்னி நட்சத்திரம்

1988-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம் "அக்னி நட்சத்திரம்'. கார்த்திக், பிரபு, நிரோஷா உள்ளிட்டோர் நடித்த இப்படம் விமர்சனம் ரீதியாகவும்
அக்னி நட்சத்திரம்

1988-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம் "அக்னி நட்சத்திரம்'. கார்த்திக், பிரபு, நிரோஷா உள்ளிட்டோர் நடித்த இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இப்படத்தின் ரீமேக் பற்றி அவ்வப்போது பேச்சு வருவதுண்டு.
 ஆனால் இப்போது அந்தப் படத்தின் தலைப்பில் ஒரு படம் வருகிறது. உதயா - விதார்த் நடிக்கின்றனர். கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ் மணிகண்டன் சிவதாஸ் - ஜேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. குற்றப் பின்னணியை களமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.
 இப்படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன்ராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய சரண் இப்படத்தை எழுதி இயக்குகிறார். மணிரத்னத்தின் படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லையென படக்குழு அறிவித்துள்ளது. எல். கே .விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். சில்வா சண்டை காட்சிகளை அமைக்கிறார். ஒய். ஆர். பிரசாத் இசையமைக்கிறார். பா விஜய் பாடல்களை எழுதுகிறார். படத்தொகுப்பு லோகேஷ். வேலூர், ஏலகிரி, சென்னை, கோவையில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com