அறுவடை நம்பிக்கைகள்!

தேனி மாவட்டத்தில் உள்ள பிரன்மலைக் கள்ளர்கள் சோளத்தை ஆடியில் விதைத்து, மார்கழியில் அறுவடை செய்து தை மாதத்தில் தானியமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.
அறுவடை நம்பிக்கைகள்!

தேனி மாவட்டத்தில் உள்ள பிரன்மலைக் கள்ளர்கள் சோளத்தை ஆடியில் விதைத்து, மார்கழியில் அறுவடை செய்து தை மாதத்தில் தானியமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.
 இந்தச் சோளத்தை அறுவடைச் செய்ய கூலியாட்கள் வரிசையாக நிற்கும் போது பூவும் பொட்டும் மங்களமும் நிறைந்த கைராசியுடன் உள்ள பெண்ணிடம் கொடுத்து, முதலில் கதிரை அறுவடைச் செய்ய சொல்லுவார்கள்.
 கூலியாட்களில் கர்ப்பிணிகள் இருந்தால், அவர்கள் மடிக்கதிர் என சில கதிர்களைத் தாங்களே எடுத்துக்கொள்வர்.
 முதலாளிகள் அதில் சிலவற்றை எடுத்துக் கொண்டு மீதியை அந்த கர்ப்பிணி பெண்ணிடம் கொடுத்து விடுவர்.
 இதே போல் கூலியாள்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தால் அந்தக் குழந்தைக்கும் இலவசமாகக் சில கதிர்களைத் தருவர்.
 களத்தில் கூலி கொடுக்கும் போது மனதில் குறை ஏற்பட்டு திட்டி சென்று விட்டால் அடுத்த ஆண்டு விளைச்சல் குறையும் என நம்பிக்கை உண்டு. இதனால் கூலி கொடுக்கும் போது, பலர் திருப்தியா எனக் கேட்டுதான் கொடுப்பர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com