உங்களுக்குத் தெரியாத தோனி

தோனிக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். விளையாட்டு நேரத்தை தவிர மீத நேரங்களை ஓவியம் வரைய செலவழிக்கிறார்.
உங்களுக்குத் தெரியாத தோனி

தோனிக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். விளையாட்டு நேரத்தை தவிர மீத நேரங்களை ஓவியம் வரைய செலவழிக்கிறார்.

 சிறுவயதில் இருந்தே அவருக்குப் பிடித்த விளையாட்டு கால்பந்து. கூடவே பேட்மிண்டன் என்றால் அபார விருப்பம். பல ஆண்டு காலம் கால்பந்து அணியில் கோல் கீப்பராக காலம் கழித்தவர் தோனி. கிரிக்கெட் பக்கம் திருப்பியது ஒரு விபத்து என்றே சொல்லலாம். கிரிக்கெட் போட்டி நடந்த போது விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டு விடவே கால்பந்து கோல் கீப்பரான தோனி விக்கெட் கீப்பராக விளையாடினார். அபராமாக ஆடி அனைவரது பாராட்டையும் பெற்றார். ஏன் நாம் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்கிற ஆர்வம் தொற்றிக்கொண்டு அவரை கிரிக்கெட்டில் இந்த உயரத்திற்கு அழைத்து வந்து இருக்கிறது.

 இளம் வயதில் துறுதுறுப்பான தோனியின் வீட்டை சுற்றி மலைகள் அதிகம் இருக்கும். அதன் மீது ஏறி விளையாடுவது தான் அவருடைய பொழுதுபோக்கு. இப்போது வரை நான் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பதற்கு காரணம், மலையேற்றம் தான் என்று அடிக்கடி சொல்வார்.

 தனது ஒய்வு நேரங்களில், லதா மங்கேஷ்கரின் பாடல்களை விரும்பி கேட்பார். அவருடைய ரோல்மாடல் சச்சின் மற்றும் கில்க்ரிஸ்ட். புதிய பைக்குகளை சேகரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார். இது தவிர தீவிர வீடியோ கேம் பிரியர்.

 ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க "பள்ளி செல்வோம் நாம்' என்கிற விளம்பரத்தில் நடிக்க தோனியை அணுகியது அந்த மாநில அரசாங்கம். ஆனால் விளம்பரத்தில் நடிப்பதற்கு ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்தார். தன் மனைவியின் பெயரால் சாக்ஷி அறக்கட்டளை உருவாக்கி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்,ஆதரவற்ற முதியவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்து வருகிறார்.

 தோனி விரைவில் ஒய்வு பெறப்போகிறார் என்ற சர்ச்சை எழுந்த போது, கூட அதற்கு தோனி பதிலளிக்கவில்லை. அவருடைய மனைவி சாக்ஷி, "அது வெறும் வதந்தி' என்று ஒரே வரியில் அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அந்தளவு மனைவிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தனி அக்கறை காட்டுபவர்.
 -நிகில்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com