தேசத்தின் மகள் சிந்து: பெருமிதம் கொள்ளும் தந்தை!

பேட்மிண்டன் உலக சேம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார் பி.வி.சிந்து!
தேசத்தின் மகள் சிந்து: பெருமிதம் கொள்ளும் தந்தை!

பேட்மிண்டன் உலக சேம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார் பி.வி.சிந்து!
 இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சிந்துவின் இந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்கள் அவருடைய அப்பா பி.வி.ரமணா, அம்மா பி.விஜயா.
 சிந்துவின் சமீபத்திய வெற்றி அவரை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளது. இந்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று அவருடைய அப்பா ரமணாவிடம் கேட்ட போது சொன்னார்:
 "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு சாதாரணப் பெண்ணான சிந்து, இன்று உலகமே பாராட்டும் அளவிற்குப் பெயர் பெற்றுள்ளது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. 10 வயதில் அவள் பேட்மிண்டனில் காட்டிய ஆர்வம், இன்று அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது.
 சிறு வயதில் பயிற்சிக்காக சிந்துவை உள்விளையாட்டு அரங்கிற்கு அழைத்துச் செல்வேன். ஆனால் சிந்துவின் மனதில் கைப்பந்து மீது நாட்டம் வரவில்லை. அதே உள்விளையாட்டு அரங்கில் பக்கத்தில் சிலர் ஜாலியாக ஆடிக்கொண்டிருந்த பேட்மிண்டன் தான் அவரைக் கவர்ந்தது. அது முதல் பேட்மிண்டன் ராக்கெட்டை எடுத்து விளையாடிக் கொண்டிருப்பார். 2001-ஆம் ஆண்டு இங்கிலாந்து பேட்மிண்டன் பட்டத்தை இந்திய வீரர் கோபிசந்த் கைப்பற்றிய போது, வெகுவாக ஈர்க்கப்பட்ட சிந்து, "இனி பேட்மிண்டன் தான் வாழ்க்கை' என்ற முடிவுக்கு வந்தார்.
 நம்மைப் போன்றே கைப்பந்து நட்சத்திரமாக உருவாக வேண்டும் என்று சிந்துவை நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. அவளின் விருப்பத்திற்கே விட்டு விட்டோம். "நான் பேட்மிண்டன் விளையாட ஆசைப்பட்ட போது எனது மனதை மாற்றக்கூட எனது பெற்றோர் முயற்சிக்கவில்லை' என்று சிந்துவே அடிக்கடி அவருடைய பேட்டிகளில் சொல்வதுண்டு.
 வெளிநாடு போட்டிகளில் விளையாடும் போது நேரம் கிடைத்தால் "ஷாப்பிங்' சென்று ஏதாவது பரிசு வாங்கி வருவது சிந்துவின் வழக்கம். ஆனால் இந்த முறை அதை எல்லாம் விட உயர்ந்த தங்கப் பதக்கத்தை வாங்கி விட்டார். "ஒரு பெற்றோருக்கு இதை விட என்ன பெருமை வேண்டும். சிந்து, இந்தத் தேசத்தின் மகள்'' என்கிறார் பி.வி ரமணா.
 - ராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com