Enable Javscript for better performance
வைரஸ் படங்களை அதிகமாக பார்க்கும் ரசிகர்கள்- Dinamani

சுடச்சுட

  

  வைரஸ் படங்களை அதிகமாக பார்க்கும் ரசிகர்கள்

  Published on : 06th April 2020 03:39 PM  |   அ+அ அ-   |    |  

  sk13

  கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீடுகளில் முடங்கி இருக்கும் பொதுமக்கள் வைரஸ் தொடர்பாக வெளியான ஹாலிவுட் மற்றும் உள்ளூர் படங்களை தேடிப் பார்த்து வருகிறார்கள். கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான "கன்டஜியன்' திரைப்படம் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரûஸ நினைவுப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. இதனால் இப்படம் கடந்த சில நாட்களாக உலகம் முழுக்க தேடும் படமாகி உள்ளது. கூகுளில் "சிறந்த வைரஸ் திரைப்படங்களை மக்களும் ஏற்கெனவே தேடத் தொடங்கிவிட்டனர். கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற படங்களைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  இந்த நிலையில் சில இந்திய திரைப்படங்களும் வைரஸ்களின் கொடூர முகத்தை காட்டும் வகையில் காட்சியாக்கப்பட்டுள்ளன. அவற்றில் கமல்ஹாசனின் "தசாவதாரம்" முதல் சூர்யாவின் "ஏழாம் அறிவு' படம் வரை, தொற்று நோய்க்கான வாய்ப்பை சமூகம் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை புரியவைத்தன.
  2008- ஆம் ஆண்டு "தசாவதாரம்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், நடிகர் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்திருப்பார். இப்படத்தின் மையக்கரு அமெரிக்க விஞ்ஞானி ஒருவரை சுற்றி அமைந்திருக்கும். பயோ வெப்பனான ஒரு வைரஸின் ஆபத்தை அறிந்த அவர் எப்படி வைரஸ் பரவலை தடுக்க முயற்சிக்கிறார், அந்த வைரஸ் நிரப்பப்பட்ட கன்டெயினர் எப்படி இந்தியாவை அடைகிறது, அதனால் ஏற்படும் பேரழிவை தடுக்கப் போராடும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கும்.
  அந்தப் படத்தின் ஒரு காட்சியில் கமல்ஹாசன், எபோலா வைரஸ் பற்றியும் குறிப்பிடுவார். எபோலா வைரஸ் கினியா மற்றும் லைபீரியா போன்ற நாடுகளில் பெரும் உயிர் இழப்பு மற்றும் சமூக பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியது. "தசாவதாரம்' திரைப்படம் ஆபத்தான வைரஸ்களால் ஏற்படும் ஆபத்து குறித்துப் பேசிய முதல் தமிழ் திரைப்படமாகும்.
  சூர்யா நடிப்பில் 2011-ஆம் ஆண்டு வெளியான படம் "ஏழாம் அறிவு'. இந்தப் படம் தற்போதைய சூழ்நிலையுடன் ஒத்துப் போவதால் கடந்த சில நாட்களாக இந்தப் படம் அதிகம் செய்திகளில் அடிபட்டு வருகிறது. உலகம் முழுவதும் மிகக்குறுகிய காலத்தில் பரவிய கரோனா வைரûஸப் போலவே, இந்தப் படத்திலும் வைரஸ் சீனாவிலிருந்து உருவாகிறது. 5 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போதி தர்மர் என்ற போராளி மற்றும் மருத்துவர், நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை குணப்படுத்துகிறார்.
  பின்னர், 20 -ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் இதேபோன்ற நிலைமை ஏற்படும்போது, ஒரு மரபணு பொறியியல் மாணவர் போதி தர்மரின் சந்ததியினரின் மரபணு நினைவை எழுப்ப முயற்சிப்பதாக படம் உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் பண்டைய மற்றும் நீண்டகாலமாக மறந்துபோன திறன்களை அவர் பயன்படுத்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்தப் படமும் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளான சீனா மற்றும் இந்தியா இடையே ஒரு பயோ வாரை நிறுத்தும் வகையிலேயே இருக்கும்.
  அடுத்து 2014-ஆம் ஆண்டு வெளியான "வாயை மூடி பேசவும்' என்ற படமும் ஒரு வைரஸ் காய்ச்சல் குறித்து பேசியிருக்கும். "ஊமை காய்ச்சல் வைரஸ்' என்று பெயரிடப்பட்ட ஒரு மர்மமான நோய் ஒரு மலைப்பகுதியில் பரவி அப்பகுதி மக்களின் குரலை இழக்கச் செய்கிறது. இந்த வைரஸ் ஒரு கட்டத்தில் மரணத்தைக் கூட ஏற்படுத்துகிறது, கடுமையான இருமல் அதன் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கும்.
  அடுத்து 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "வைரஸ்' திரைப்படம் ஆகும். இந்த வைரஸ் படம் கேரளாவைத் தாக்கிய நிபா வைரஸ் தாக்குதல் குறித்த செய்தி அறிக்கைகளின் கற்பனையான ஆவணமாகும். வைரஸ் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தைரியமான ஒரு குழு எவ்வாறு தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறது என்பதை சொல்லும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்தப் படங்களை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai