முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
சூர்யாவின் தயாரிப்பில் ரம்யா
By DIN | Published On : 19th April 2020 09:21 PM | Last Updated : 19th April 2020 09:21 PM | அ+அ அ- |

"ஜோக்கர்', "ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், கடந்தாண்டு தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் இணையத்தில் பிரபலமானது. இதன்பின் பல்வேறு பட வாய்ப்புகள் வந்தும், தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வந்தார். அதன்முலம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகப் கூறியுள்ளார்.