முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
விஷ்ணுவிஷால் விளக்கம்
By DIN | Published On : 19th April 2020 08:46 PM | Last Updated : 19th April 2020 08:46 PM | அ+அ அ- |

நடிகர் விஷ்ணு விஷால் - ரஜினி இருவரும் 2018-ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்றனர். அதற்குப் பிறகு ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணுவிஷாலுக்கு காதல் ஏற்பட்டு, விரைவில் அவரைத் திருமணம் செய்யவுள்ளார். இதனால் மனைவி ரஜினியைப் பிரிந்ததற்கு ஜுவாலா கட்டாவுடன் ஏற்பட்ட பழக்கம் தான் காரணம் என்று செய்திகள் வெளியானது. இந்த தகவலுக்கு விஷ்ணு விஷால் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசும் போது... ""ஜுவாலா கட்டாவினால் நான் என் மனைவியைப் பிரிந்துவிட்டேன் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் "ராட்சசன்' பட சமயத்தில் நான் அமலாபாலோடு இருந்ததாகச் சொல்கின்றனர்.
அவர்கள் கூறுவது பொய் என நிரூபிக்க என்னுடைய பிரிவின் உண்மையான காரணத்தை என்னால் கூற இயலாது. அது என்னுடைய தனிப்பட்ட விஷயம்'' என்று தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வாழ்க்கையைப் பற்றித் தெரியாமலேயே பலர் கருத்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.