அனுபவங்கள் கலகலப்பு !

"தி ஃபேமிலி மேன்' வெப் சீரீஸ் இந்திய அளவில் வரவேற்பை பெற்றதை அடுத்து சினிமா, வெப் சீரீஸ் என இரண்டிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார், ப்ரியாமணி.
அனுபவங்கள் கலகலப்பு !

"தி ஃபேமிலி மேன்' வெப் சீரீஸ் இந்திய அளவில் வரவேற்பை பெற்றதை அடுத்து சினிமா, வெப் சீரீஸ் என இரண்டிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார், ப்ரியாமணி. தமிழ்,கன்னட படங்களில் நடித்த காலங்களில் சென்னை, பெங்களூரு வாசியாக வட்டமடித்து வந்த இவர், இப்போது முழுக்க மும்பை  வாசியாக மாறியிருக்கிறார்.  நிறைய ஹிந்தி படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

தமிழில் "பருத்திவீரன்' ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது மாதிரி தற்போது வெப் சீரீஸ் உலகம் உங்களக்கு நல்ல பாலமாக அமைத்திருக்கிறதா?
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு, ஜெர்மன்,ஜப்பான், பிரெஞ்சு, இத்தாலி, பிரேசில் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் வெளியான வெப் சீரீஸ் "தி ஃபேமிலி மேன்'. அதில் கல்லூரி பேராசிரியை, குடும்பத்தலைவி, குழந்தைகளுக்கு அம்மா என பல்வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு அமைந்தது. ஒரு படத்தில் இந்த அளவுக்கு பல அடுக்குகள் உள்ள கதாபாத்திரம் அமையுமா என தெரியவில்லை. கிடைத்த வாய்ப்பில் ஜொலிக்க முடிந்த அடையாளமாகவே அதை பார்க்கிறேன்.

வெப் சீரீஸ்... என்ன மாதிரியான அனுபவம்...

ஒரு வெப் சீரீஸ் குறைந்தது 10அத்தியாயங்கள் கொண்டாதாக அமைகிறது. படப்பிடிப்பு தொடங்கி டப்பிங், வேலை செய்யும் முறை என ஒரு சினிமாவை விட பரபரப்பான ஓட்டம். இந்த அனுபவங்கள் கலகலப்பாக இருக்கிறது. தொடர்ந்து இயங்கும் ஒரு சூழலால் மனம் ஒருவிதமான சுறுசுறுப்பை அடைகிறது.

"தி ஃபேமிலி மேன்' தொடரில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்தீர்கள். அது தயக்கமாக இல்லையா?

எதற்காக தயங்க வேண்டும்? இன்றைக்கு மக்களின் மனநிலை  மாறிவிட்டது. முன்பெல்லாம் ஒரு படத்தில் அம்மா கதாபாத்திரம் ஏற்றால் அதேபோல அடுத்தடுத்த படங்களும் அமையும். ஆனால் இன்று சூழல் அப்படியில்லை. "விஸ்வாசம்' படத்தில் நயன்தாரா 10 வயது மகளுக்கு அம்மாவாக நடித்தார். அடுத்தடுத்த படங்களில் மாடர்ன், இயல்பான கதாபாத்திரம் என்று மாறி விடுகிறார். அதை ரசிகர்கள் எல்லோரும் அழகாக ஏற்றுக்கொள்கிற பக்குவமும் வந்து விட்டது. அதேபோலதான் வெப் சீரீஸூம். இங்கே எந்த பிரச்னையும் இல்லை. நல்ல களம்.கதாபாத்திரம் என்றால் விளையாடலாம். அப்படித்தான் இந்த வெப் சீரீஸ். 

இடையில் இடைவெளிக்கு ஏன்?

இடைப்பட்ட அந்த இடைவெளியில் என்னை ஏன் சினிமாவில் பார்க்க முடியவில்லை என்ற கேள்வியை இயக்குநர்களிடம்தான் கேட்க வேண்டும். கதை கேட்கும்போது என்னை ஈர்க்கும் கதாபாத்திரம் என்றால் நான் உடனே நடிக்க சம்மதிப்பேன்.இப்போதும் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து கதை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறேன்.எப்போதுமே என்னை வியக்க வைக்கும் கதைக்காக காத்திருப்பேன். 

சினிமா படப்பிடிப்புக்கும், வெப் சீரீஸ் படப்பிடிப்பு சூழலுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?

திட்டமிடல், லொக்கேஷன், ஷூட்டிங் பரபரப்பு எல்லாமும் சினிமா மாதிரிதான். சில நேரங்களில் சினிமாவை விட வேகமாக ஓட வேண்டியுள்ளது. மற்றபடி எந்த தளமாக இருந்தால் என்ன? ஒரு படமோ, வெப் சீரீúஸா, சிறப்புத் தோற்றமோ, மியூசிக்கல் ஆல்பமோ அது நமக்கு பிடித்து நடிக்க வந்துவிட்டோம். அதை சரியாக செய்வதுதானே நம்ம வேலை.

பெங்களூருவில்தானே வசிக்கிறீர்கள்?

மும்பைக்கு வந்து ரொம்ப நாள் ஆகி விட்டது. படப்பிடிப்பு இருக்கும்போது அந்தந்த மொழி சார்ந்த தலைநகரங்களுக்கு பயணிக்கிறேன். மற்றபடி எல்லோரையும் போல சராசரியான மனுசியாகத்தான் வாழ்க்கை நகர்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com