காக்கிகளின் மனிதம்!

சொந்த ஊர் சென்னைதான். சினிமாவின் மீது காதல். இளவயதில் அப்பாவோடு கைகோர்த்துக் கொண்டு நடக்கும் போது அவர் சொல்லும் சம்பவங்கள் எல்லாம் எனக்குள் திரைக்கதையாகி ஓடிக் கொண்டிருக்கும்.
காக்கிகளின் மனிதம்!

சொந்த ஊர் சென்னைதான். சினிமாவின் மீது காதல். இளவயதில் அப்பாவோடு கைகோர்த்துக் கொண்டு நடக்கும் போது அவர் சொல்லும் சம்பவங்கள் எல்லாம் எனக்குள் திரைக்கதையாகி ஓடிக் கொண்டிருக்கும். எனக்குள் ஊற்றெடுத்துக் கொண்டிருந்த கதைகளை கோடம்பாக்கத்தில்தான் முழுமைப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு சினிமாவுக்கு வந்தேன். இயக்குநர்கள் மோகன்ராஜா, "எங்கேயும் எப்போதும்' சரவணன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பயணம். அந்த அனுபவம்தான் இப்போது இங்கே கொண்டு வந்து சேர்த்தது என உள்ளார்ந்து பேசுகிறார் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ். இவர் இயக்கியுள்ள "லாக்கப்' ஓ.டி.டி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.

லாக்கப்...பெயரே கதை பேசும் போலிருக்கே....

பெயர், கதையோடு தொடர்புடையது... இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும். கதைக்கான புள்ளி சென்னை பெரு நகரத்தின் சிறு சிறு பயணங்கள்தான். பொதுவாக சராசரி மனிதர்களுக்கு அனுபவம் குறைவுதான். மிஞ்சி மிஞ்சிப் போனால் தினமும் ஏழெட்டு பேரை புதிதாக சந்தித்துப் பேசினாலே அதிகம். ஆனால், போலீஸ் வாழ்க்கை அப்படியில்லை. ஒரு வழக்கோடு ஆறு மாதம் கூட புழங்க வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் அவர்கள் சந்திக்கிற மனிதர்கள், அவர்களின் சூழ்நிலை எல்லாமே வித்தியாசமாக இருக்கும். சில வழக்குகள் விசித்திரமாக, சிக்கலாக, அவிழ்க்க முடியாத புதிராக இருக்கும். அதற்கேத்த மாதிரி இயங்குவதே சிரமமானது. இது சில சாமானிய போலீஸ் அதிகாரியின் கதை. இது ஒரே ஒரு போலீஸ் அதிகாரியின் கதையும் கிடையாது. நான் பார்த்த, கேட்ட, படித்த நிறைய விஷயங்களின் தொகுப்பு. நிச்சயம் "சிங்கம்', "சாமி' படங்கள் மாதிரி கிடையாது. அந்த இடத்திற்கு வர எனக்கு நாள் பிடிக்கும். இது த்ரில்லர் கதை. கதை அனுமதிக்கிற, பொருந்துகிற அளவுக்குத்தான் எல்லாம். விஜய் ஆண்டனியை கோபம், பாசம், அழுகை, வெறி, கெத்து என எல்லா மனித உணர்வுகளும் உள்ளடக்கிய படம்.

கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்....

கேரளக் காவல் துறையில் பல ஆண்டுகள் போலீஸ் வேலை பார்த்த ராமச்சந்திர நாயர் என்பவர் எழுதிய "நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி' என்ற புத்தகம். அப்படி இருக்கும்... புரட்சியாளன் நர்கீûஸ, மேலதிகாரிகளின் குரூரமானவற்புறுத்தலால் தனது கையால் சுட்டுக் கொன்றதில் இருந்து, பொது மக்களிடம் இருந்து எவ்வளவு விலகி நிற்கிறான், அதிகார மையங்கள் அவனை எப்படியெல்லாம் கேவலமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது வரை மிகத் தீவிரமாக எழுதப்பட்ட பதிவு அது. போலீஸ்காரர்களில் அற்புதமானவர்களையும் பார்த்திருக்கலாம். ஆனால், இங்கே நிறையப் பேருடையமனிதத்தை அதிகாரமும், அரசியலும் தின்று விடுகின்றன. அரசியலும், சாதியும், பணமும் காவல் துறையை இயக்கிக் கொண்டு இருக்கிற வரை உன்னதமான பாதுகாப்பை நம்மால் உணரவே முடியாது. மேல் அதிகாரிகளால் பெண் காவலர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிகாரத்தாலும், கேவலமான அரசியல்வாதிகளாலும் காக்கிகளின் மனிதம் இங்கே மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்படி பல விஷயங்கள் மீது பொது விவாதங்களை எழுப்புவதாக இருக்கும் இந்தக் கதை.

போலீûஸ விமர்சிப்பதுதான் இங்கே அதிகமாக இருக்கிறதே..

ஒரு குற்றம்தான் இந்தக் கதையின் பிரதானம். குற்றத்தின் உருவாக்கம் தொடங்கி, அதன் சம்பவங்கள் வரை எல்லாமே இதில் இருக்கும். போலீஸ் கதைகளில் 100க்கு 80 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. . அதை ரிபீட் செய்ததில் சில படங்கள் தோற்றிருக்கலாம். திரைக்கதை எழுதும் போதே, சேகரித்த கதைகளே எக்கச்சக்கம் இருக்கும். நானே போலீஸ் ஸ்டோரியில் புதிதாக பத்துக் கதை இயக்க முடியும். ஒரு நபரை நாம் சந்திக்க மட்டும்தான் செய்வோம். போலீஸ் அந்த நபரை ஊடுருவிப் பார்க்கும். கண்காணிக்கும். நீங்கள் போலீஸில் நல்லவரையும், கெட்டவரையும் பார்த்திருக்கலாம். இது அப்படி இரண்டு பக்கமும் இருக்கிறது.

ஈஸ்வரிராவ் போலீஸாக நடித்திருக்கிறாரா...

ஆமாம். அவருக்கெனத் தனி ரசிகர் வட்டம் இங்கே உண்டு. அதை விட அவரிடம் எந்தப் பிரச்னையும் இல்லை. கதையைக் கேட்டதும் சம்மதம் சொல்லி விட்டார். கதை கூடவே பயணிக்கிற மாதிரி ஓர் இடம் அவருக்கு. காதல், அன்பு, நேசம், பாசம் எல்லாம் வேலை செய்கிற இடத்தில் கிடைத்தால் எப்படியிருக்கும். அப்படி ஒரு விதமாகக் கதை இருக்கும். படத்தில் அவருக்கு அருமையான ரோல். முதன் முறையாகப் போலீஸ் ரோல். நடித்துக் கொண்டு இருக்கும் போதே அவர் அதை உணர்ந்ததுதான் விசேஷம். எனக்கு தமிழ் பேச தெரிந்த, நான் சொல்லுவதைப் புரிந்து கொள்ள தெரிந்த நடிகை தேவை. அந்த இடத்துக்கு வாணிபோஜன், பூர்ணா இருவரும் வந்து சேர்ந்தார்கள். பூர்ணா இரு குழந்தைகளுக்குத் தாயாக நடிக்கிறார்.

முதல் படம்... கரோனா சூழல் எப்படி இருக்கு...

வித்தியாசமாக இருக்கிறது. பைரசி இண்டர்நெட் என சினிமாவுக்கு ஆயிரம் பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது கரோனா. 10 வருடங்களுக்கு ஒரு முறை சினிமா மாறும் என்பார்கள். ஆனால் இங்கே வாரத்துக்கு ஒரு முறை மாற்றம் நடக்கிறது. இதுதான் தமிழ் சினிமாவின் போக்கு எனச் சொல்வதற்கு எதுவும் இல்லை. யாரிடமும் உதவியாளராக இல்லாதவர்கள், எந்தப் பயமும் இல்லாத புதுப் புது இளைஞர்கள் உள்ளே காத்துக்கிடக்கிறார்கள். சினிமாவில் அடுத்தடுத்து என்ன.. இதை அமைதியாக எல்லோரும் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com