விமான நிலையத்தில் விவசாயம்!

விமான நிலையத்தில் விவசாயம்!

முழுக்க முழுக்க சூரிய ஒளியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தைத் தனது செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும் விமான நிலையம், ரயில் நிலையம் உலகிலேயே இந்தியாவில்தான் இருக்கிறது என்று சொன்னால் பலருக்கும்

முழுக்க முழுக்க சூரிய ஒளியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தைத் தனது செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தும் விமான நிலையம், ரயில் நிலையம் உலகிலேயே இந்தியாவில்தான் இருக்கிறது என்று சொன்னால் பலருக்கும் அதிசயம் ஆச்சரியத்தைத் தரும்.

கேரளத்தில் கொச்சி சர்வதேச விமான நிலையம் தினந்தோறும் 12 மெகாவாட் மின்சாரத்தை சோலார் பேனல்கள் மூலம் தயாரிக்கிறது. தனது செயல்பாடுகளுக்குத் தேவையான மின்சாரம் போக உபரியாகத் தயாரிக்கப்
படும் மின்சாரத்தை கேரள மாநில மின்சார வாரியத்திற்கு விற்கிறது.

தனது நிலங்களில் இயற்கை விவசாயம் செய்து வரும் கொச்சி விமான நிலையம் கேரளத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பரங்கிக்காய், வெள்ளை பூசணி, வெள்ளரிக்காய்களை விளைவிக்கிறது. விமான நிலையத்தில் விவசாயம் செய்யும் கொச்சி சர்வதேச விமான நிலையத்தை ஒரு முன்மாதிரி விமான நிலையம் என்று சர்வதேச ஊடகங்கள் புகழ்கின்றன.

சூரிய மின்சக்தி மூலம் செயல்படும் ரயில் நிலையம் அஸ்ஸாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தியில் உள்ளது. அடியில் நிலையத்தின் கூரைகளில் எல்லாம் சோலார் பேனல்களைப் பொருத்தி மின்சாரம் தயாரிக்கிறது.

நாள் ஒன்றுக்கு 700 கி.வாட் மின்சாரம் இங்குத் தயாரிக்கப்படுகிறது. ரயில் பெட்டிகளிலும் இதர ரயில் நிலையங்களிலும் ஆங்காங்கே சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் தயாரித்துத் தனது செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் இந்திய ரயில்வேதுறை ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com