தஞ்சை வரலாற்றுக் கதை 

வரலாற்றுக் கதைகள் அதிகமாக உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் இணைய வருகிறது "சோழநாட்டான்'.
தஞ்சை வரலாற்றுக் கதை 

வரலாற்றுக் கதைகள் அதிகமாக உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் இணைய வருகிறது "சோழநாட்டான்'. தஞ்சையை களமாகக் கொண்டு உருவாகும் வரலாற்றுப்  படம் இது. விமல் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காருண்ய கேதரின் நடிக்கிறார். தென்னவன்,  சீதா, பரணி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

சத்தியமங்கலம் காட்டில் உள்ள  மலைப்பகுதியில் தமிழ் சினிமா இதுவரை காணாத  காடுகளில் படப்பிடிப்பு  நடத்த திட்டமிட்டுள்ளனர். தஞ்சாவூர், ஹைதராபாத்  போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.  

பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு தான் அப்படத்தின் பாடலை வெளியிடுவார்கள். ஆனால், தற்போது தஞ்சாவூரில் குடமுழுக்கு நடந்து முடிந்துள்ளதால், படப்பிடிப்பு பணிகளின் இடையே குடமுழுக்கை முன்னிட்டு அந்தப் பகுதியைப் பெருமைப்படுத்தும் விதமாக பிப்ரவரி மாதத்திலேயே முதல் பாடலை வெளியிட உள்ளார்கள்.  ரஞ்சித் கண்ணா எழுதி இயக்குகிறார்.  நட்சத்திர  பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் ஷங்கர் இசையமைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com