Enable Javscript for better performance
தொடங்கியது மாநாடு- Dinamani

சுடச்சுட

    

    தொடங்கியது மாநாடு

    By DIN  |   Published on : 25th February 2020 01:09 PM  |   அ+அ அ-   |    |  

    Simbu

    நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளிலேயே இருந்து வந்த படம் "மாநாடு'. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் அடுத்தடுத்த இழுபறிகளில் சிக்கியது. இதனையடுத்து சிம்புவை படத்தில் இருந்து நீக்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சிம்பு இல்லாத நிலையில் வேறு ஒரு கோணத்தில் வெங்கட் பிரபு அந்தப் படத்தை இயக்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
     இந்த நிலையில் "மகாமாநாடு' என்ற படத்தை சிம்புவே இயக்கி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டது. இதையடுத்து சுரேஷ் காமாட்சி - வெங்கட்பிரபு - சிம்பு கூட்டணி மீண்டும் இறுதியானது.
     இப்போது இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அடுத்தடுத்த கட்டங்களாக படப்பிடிப்பு நடக்கவுள்ளது. பாரதிராஜா, மனோஜ், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai