Enable Javscript for better performance
தமிழில் அவதார் நடிகர்கள்- Dinamani

சுடச்சுட

    
    sk9

    உலக சினிமா ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்த படம் "அவதார்'. ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிக் குவித்த உலக சினிமாவின் பிரமிப்பாக இப்போதும் உள்ளது. தற்போது இப்படத்தில் நடித்த நடிகர்கள் தமிழில் கால் பதிக்க இருப்பது உலக சினிமா ரசிகர்கள் தமிழ் சினிமா பக்கம் திரும்ப வைத்துள்ளது. ரீல் கட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் மற்றும் மலேசியாவிலிருந்து நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

    அறிமுக இயக்குநர் நரேன் பிரனியாஸ் ஆர் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழியில் உருவாகவுள்ளது. நடிகர்களின் பெயர் பட்டியலை வரும் 26-ஆம் தேதி படக்குழு வெளியிடவுள்ளது. தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மரியா ஜெரால்டு இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    முதற்கட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி லடாக்கில் தொடங்க உள்ளது. சிங்கப்பூர், வியட்நாம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai