Enable Javscript for better performance
ரோஜா மலரே! - 21: குமாரி சச்சு- Dinamani

சுடச்சுட

  
  sk5

  அ​​டுத்து எனக்கு வந்த படம் "பிரேம பாசம்'. இதில் சாவித்​திரி அம்​மா​தான் கதா​நா​ய​கி​யாக நடித்​தார்​. அவ​ரு​டன் கே.சா​ரங்​க​பாணி, முன்​னாள் முதல்​வர் எம்.​ஜி.​ஆ​ரின் சகோ​த​ரர் எம்.​ஜி.​சக்​ர​பாணி, வி.கே.​ரா​ம​சாமி, டி.பி.​முத்​து​லட்​சுமி, ஈ.வி.​ச​ரோஜா, பாலாஜி, கே. வ​ர​லட்​சுமி, போன்​றோர் நடித்​தார்​கள். இந்​தப் படத்​தின் இசை எஸ். ராஜேஸ்​வர ராவ். படம் வெளி​யா​னது மார்ச் மாதம், 1956 -ஆம் ஆண்டு என்று நான் நினைக்​கி​றேன். சாவித்​திரி அம்​மா​வின் சிறு​வ​யது பெண்​ணாக நடித்​தேன். இந்​தப் படத்​தைத் தமிழ் மற்​றும் தெலுங்கு என இரு மொழி​க​ளி​லும் எடுத்​தார்​கள். இந்த இரு மொழி​க​ளி​லும் நான் தான் அந்த வேடத்​தைச் செய்​தேன். கார​ணம், என்​னால் இரண்டு மொழி​க​ளி​லும் பேச முடி​யும் என்​ப​தால் என்​னையே நடிக்​கச் சொன்​னார்​கள்.


  தெலுங்கு படத்​தின் பெயர் “"பலே ராமுடு'”. அந்​தப் படத்​தின் படப்​பி​டிப்பு நரசு ஸ்டூ​டி​யோ​வில் நடை​பெற்​றது. அன்​றும் கிட்டத்​தட்ட எல்லா ஸ்டூ​டி​யோக்​க​ளும் கோடம்​பாக்​கத்​தி​லேயே இருந்​தன. இன்​றும் சில இருக்​கின்​றன. இந்த நரசு ஸ்டூ​டியோ ஒன்று தான் கிண்​டி​யில் இருந்தது. நரசு காபி முத​லாளி தான் இந்த ஸ்டூ​டி​யோ​வை​யும் சொந்​த​மாக நடத்தி வந்​தார். அவர் தான் சிவாஜி கணே​சன், பத்​மினி நடித்த "ஸ்ரீவள்ளி' என்ற படத்​தை​யும் தயா​ரித்​த​வர்.

  கிண்​டி​யில் உள்ள நரசு ஸ்டூ​டியோ சில காலம் "கோகோ​கோலா' பானம் வைக்​கும் இட​மாக மாறி​யது. அப்​பொ​ழுது அந்த ஸ்டூ​டி​யோ​வில் மேலா​ள​ராக இருந்​த​வர் யார் தெரி​யுமா? பல படங்​களை எடுத்த பிர​பல தயா​ரிப்​பா​ளர், நடி​கர், எல்​லா​வற்​றை​யும் விடச் சிறந்த மனி​தர். அவர்​தான் நடி​கர் பாலாஜி. அவர் அங்கு மேலா​ள​ராக இருந்​தார்.

  "பிரேம பாசம்' படத்​தில் ஜெமினி கணே​சன், சாவித்​திரி ஜோடி​யாக நடித்​தார்​கள். அந்​தப் படத்​தில் சைக்​கிள் ஓட்டும் காட்சி​கள் அதி​கம் இடம் பெறு​வ​தால், எனக்கு சைக்​கிள் ஒட்டத் தெரி​யுமா? என்று கேட்டார்​கள். எனக்கு அன்று சைக்​கிள் ஓட்டத் தெ​ரி​யாது. அந்த உண்​மையை சொன்​னேன். எல்​லோ​ரும் கூடிப் பேசி​னார்​கள். பல காட்சி​கள் சைக்​கிளை நான் ஓட்டு​வது போன்ற காட்சி​கள் இடம் பெறு​வ​தால் சைக்​கிள் கற்​றுக் கொள்ள வேண்​டும் என்று தெரி​வித்​தார்​கள்.

  எனக்கு சைக்​கிள் ஓட்டத் தெரி​யா​த​தால், நானும் சரி என்று தலை ஆட்டி​னேன். எப்​பொ​ழு​துமே புதி​தாக ஏதா​வது கற்​றுக் கொள்ள வேண்​டும் என்​றால் எனக்கு எப்​ப​வுமே சந்​தோ​ஷ​மாக இருக்​கும்.

  எனக்கு யார் சைக்​கிள் ஓட்டத் கற்​றுக் கொடுப்​பது என்று யோசித்து, நடி​கர் பாலா​ஜி​யி​டம் அந்​தப் பொறுப்பை ஒப்​ப​டைத்​தார்​கள். அவர் தானே அங்கு மேனே​ஜ​ராக இருந்​தார். எனக்​காக ஒரு சைக்​கிளை வாங்கி, அந்த ஸ்டூ​டியோ முழு​வ​தும் ஓட்ட கற்​றுக் கொடுத்​தார். முதல் நாள் அன்று சைக்​கிள் பெடலை மிதிப்​பதே கஷ்​ட​மாக இருந்​தது. பல இடங்​க​ளில் விழுந்து கொஞ்​ச​மாக சைக்​கிள் ஓட்ட கற்​றுக் கொண்​டேன். இதில் பாலா​ஜி​யிடம் நான் பல தடவை கெஞ்சி இருக்​கி​றேன். அவர் சொல்​லா​மல் கொள்​ளா​மல், சைக்​கிளை பிடிக்​கா​மல் விட்டு விடு​வார். நான் விழுந்து விடு​வேன். “"ஏன் பிடிக்​க​வில்லை', என்று கேட்டால், “"படத்​தில் நான் பிடிக்க முடி​யுமா? நீ தான் தைரி​ய​மா​கச் சைக்​கிளை ஓட்ட​வேண்​டும்' என்று சொல்லி எனக்கு ஓட்டக் கற்று கொடுத்​தார்.

  நான் பிடித்​தி​ருக்​கி​றேன் என்று சொல்லி விட்டு, நைசாக விட்டு விடு​வார். அப்​பு​றம் நான் விழுந்து விடா​மல் ஓட்டும் வண்​ணம் அவர்​தான் எனக்​குக் கற்று கொடுத்​தார். இந்​தப் படத்​தில் ஜெமினி கணே​ச​னுக்கு ஒரு தம்பி வேடம் இருந்​தது. யார் இந்த வேடத்​தைச் செய்​வது என்று பல​ரை​யும் யோசித்​துப் பார்த்​தார்​கள். அப்​பொ​ழுது ஜெமினி கணே​சன் பாலா​ஜியை சிபா​ரிசு செய்​ய​தார்.

  கையில் வெண்​ணெய்யை வைத்​துக் கொண்டு, ஏன் நீங்​கள் நெய்​யுக்கு அலை​கி​றீர்​கள். உங்​கள் பாலாஜி அழ​காக இருக்​கி​றார். எனது தம்பி பாத்​தி​ரத்​திற்கு மிக​வும் பொருத்​த​மா​ன​வ​ராக இருப்​பார். பாலா​ஜியை நடிக்க வைக்​க​லாம் என்று ஜெமினி கணே​சன் சொல்ல, அந்​தப் படத்​தில் பாலாஜி அறி​மு​க​மா​னார்.

  அந்​தப் படத்​தின் இயக்​கு​நர் வேதாந்​தம் ராக​வையா. அவர் சிறந்த நடன அமைப்​பா​ளர். மிகச் சிறப்​பாக நட​ன​மா​டு​வார். மற்​ற​வர்​க​ளுக்​கும் நடன அசை​வு​க​ளைக் கற்​றுக் கொடுப்​பார். இது மட்டும் இல்​லா​மல் நடி​கர், நடி​கை​யர்​கள் முடிந்​த​வரை நட​னமோ, சண்டை காட்சி​க​ளையோ அவர்​களே நடிக்க வேண்​டும் என்று விரும்​பு​வார், அதை வெளிப்​ப​டை​யா​க​வும் சொல்​லு​வார்.

  அந்​தப் படத்​தின் ஒரு காட்சி​யில் மாடி​யில் இருந்து என்​னைத் தள்ள, நான் உருண்டு விழ​வேண்​டும். காட்சிப்​படி எங்​கள் குடும்​ப​மும் அவர்​கள் குடும்​ப​மும் நெருங்​கிய சொந்​தக்​கா​ரர்​கள் தான். நாங்​கள் அவர்​க​ளி​டம் கொடுத்​துள்ள பணத்​தைத் திருப்​பிக் கேட்கும் போது, அவர்​க​ளில் ஒரு​வர் என்​னைப் பிடித்​துத் தள்​ளும் போது, நான் படி​க​ளில் உருண்டு விழ​வேண்​டும். அப்​படி உருண்​ட​தால் எனக்​குக் கால் ஊன​மாகி விடும். பின்​னா​ளில் வயது ஏற ஏற, சாவித்​திரி அம்​மா​வுக்​கும் கால் ஊனம் நிரந்​த​ர​மாகி விடும். சின்ன வயசு சாவித்​தி​ரி​யாக நான் நடித்​த​தால் எனக்கு என்ன நடக்​கி​றதோ அது அவ​ருக்​கும் தொட​ரும்.

  முத​லில் எனக்​குப் பதில் வேறு ஒரு குழந்​தையை (டூப் போட்டு) எடுத்​துப் பார்த்​தார்​கள். ஆனால் அந்​தக் குழந்தை தள்ளி விட்ட பிறகு உருண்​டது, ஏனோ அவர்​க​ளுக்​குத் திருப்​தி​க​ர​மாக இல்லை . என்ன செய்​வது என்று தெரி​யாத நிலை​யில், இயக்​கு​நர் வேதாந்​தம் ராக​வையா என்​னி​டம் வந்து, “"அந்த குழந்தை உருண்​டது, எங்​க​ளுக்​குத் திருப்​தி​யாக இல்லை. சச்சு நீயே இந்த உரு​ளும் காட்சி​யில் நடிக்​கி​றாயா?'” என்று கேட்டார். அந்​தக் காட்சி எடுக்​கும் போது நானும் அந்​தப் படப்​பி​டிப்​புத் தளத்​தி​லேயே இருந்​தேன்.

  நான் முன்பே சொல்​லி​யது போல், எனக்கு என்​றுமே, எதற்​கா​க​வும் பயம் இல்லை. இயக்​கு​நர் வேதாந்​தம் ராக​வையா கேட்ட​வு​டன், நான் ஒரு நொடி கூடத் தாம​திக்​கா​மல், “"பண்​றேன் சார், நானே பண்​றேன்' ​என்று சொன்​னேன். நான் மாடிப் படிக்​கட்​டி​லி​ருந்து உருள தயா​ரா​னேன். அதற்​குள் என் பாட்டி என்​னி​டம் வந்து, “"என்​னி​டம் வந்து யாரும், எது​வும் சொல்ல​வில்லை. யாரை​யும் கேட்கா​மல், நீ ஏன் ஒத்​துக்​கொள்​கி​றாய். மாடிப் படிக்​கட்டு மிக​வும் உய​ர​மாக இருக்​கி​றது. நீயோ குழந்தை, உரு​ளும் போது , ஏதா​வது நடந்​தால் யார் பொறுப்பு? சில விஷ​யங்​க​ளில் யோசித்து முடிவு செய்​ய​வேண்​டும்' என்​றார்.

  "நான் பார்த்​துக் கொள்​கி​றேன், பயப்​​ப​ட​வேண்​டாம்' - என்று பாட்டிக்கு நான் ஆறு​தல் வார்த்​தை​க​ளைச் சொன்​னேன். எல்​லோ​ரும் நாங்​கள் பேசிக்​கொண்​டி​ருக்​கும் போதே காட்சிக்​கான ஏற்​பா​டு​க​ளைச் செய்​யப் போனார்​கள். இந்த மாதிரி ரிஸ்க் காட்சி​க​ளைச் செய்ய நான் என்​றுமே தயங்​கி​ய​தில்லை. இன்​னும் சொல்​லப் போனால் எனக்​குப் பிடித்​த​மான காட்சி​கள் இவை தான் என்று கூடச் சொல்​ல​லாம். இன்று கூட வயது வித்​தி​யா​சம் பார்க்​கா​மல் மாடி​யி​லி​ருந்து குதி என்​றால் நான் தயங்​கா​மல் குதித்து விடு​வேன்.

  சமீ​பத்​தில் நான் நடித்த “"நந்​தினி'” தொலைக்​காட்சி தொட​ரில் ஒரு காட்சி​யில் என்னை மயங்கி விழ சொன்​னார்​கள். டைரக்​டர் ராஜ்​க​பூர் என்​னி​டம் வந்து, “"நீங்​கள் மயங்கி விழும் காட்சி. நீங்​கள் கண்​களை மூடி மயக்​க​ம​டை​வது போல் நடித்​தால் போதும். அடுத்த ஷாட் நீங்​கள் கீழே படுத்​தி​ருக்​கும் காட்சி​யைக் காண்​பித்து, நீங்​கள் மயங்கி விட்டீர்​கள் என்று ரசி​கர்​கள் புரிந்து கொள்​வார்​கள்' என்​றார். மக்​கள் புரிந்து கொள்​வார்​கள் என்​றா​லும் நாமே நடித்​தால் தான் நன்​றாக இருக்​கும் என்று எனக்​கும் தோன்​றி​யது. காமிரா ஓடும் போது நான் மயங்கி விழும் காட்சி​யில், நிஜ​மா​கவே மயங்கி விழுந்​தது போல் நடிக்​கா​மல், தடா​லென்று நான் தரை​யில் விழ, எல்​லோ​ரும் பயந்து விட்டார்​கள்.

  இயக்​கு​நர் ராஜ்​க​பூர் என்​னி​டம் வந்து, "“என்​னம்மா இப்​படி விழுந்து விட்டீர்​களே. நான் மிக​வும் பயந்து விட்டேன்' என்று சொல்ல, நான் அதற்கு என்ன சொன்​னேன் தெரி​யுமா. "“நடிப்​பின் மீது உள்ள ஈர்ப்பு தான் எங்​களை எல்​லாம் இப்​ப​டிச் செய்ய வைக்​கி​றது. நாங்​கள் இப்​ப​டிச் செய்​வ​தால் ஆண்​ட​வன் கண்​டிப்​பாக எங்​க​ளைக் காப்​பாற்​று​வார் என்று நான் திட​மாக நம்​பு​கி​றேன். அந்த நம்​பிக்​கை​தான் இது​வரை எனக்​குத் துணை நிற்​கி​றது' என்று சொன்​ன​வு​டன் இயக்​கு​நர் ராஜ்​க​பூர் என்​னைப் பார்த்து வணங்​கிச் சென்​றார்.

  வயது ஏற ஏற குழந்தை நட்சத்​தி​ர​மாக இருந்த நான் கொஞ்​சம் கொஞ்​ச​மா​கக் குழந்​தைப் பரு​வத்தை விட்டு வெளியே வர, தங்கை, அக்கா கதா​பாத்​தி​ரங்​கள் என்னை நாடி வரத் தொடங்​கின.

  நான் என்​றுமே வீட்டில் சும்​மா உட்கார்ந்​த​தில்லை. இந்​தச் சம​யத்​தில் "கோடீஸ்​வ​ரன்' என்ற ஒரு படம் வந்​தது. அதில் நடித்​த​வர்​கள் இரு​பெ​ரும் நட்சத்​தி​ரங்​கள். ஒன்று நடி​கர் தில​கம் சிவாஜி கணே​சன் மற்​றது வீணை எஸ்.​பா​ல​சந்​தர். அதன் இயக்​கு​நர் சுந்​தர் ராவ் நாட்கர்னி. இவர் மிகப்​பெ​ரிய இயக்​கு​நர். இவ​ரு​டைய இயக்​கத்​தில் நடிப்​ப​தில் எனக்கு மட்டும் அல்ல, எங்​கள் வீட்டில் உள்​ள​வர்​கள் எல்​லோ​ரும் சந்​தோ​ஷப்​பட்​டோம். அதே போன்று இன்​னொரு மிகப் பெரிய டைரக்​டர் கே. சுப்​ர​ம​ணி​யம். இவர் இயக்​கத்​தில் நான் நடித்த படம் என்ன தெரி​யுமா?. அடுத்த வாரம் சொல்​கி​றேன்.

  (தொட​ரும்)

  சந்​திப்பு: சலன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai