சினிமாவில் கராத்தே கலை 

தமிழகத்தைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் பாஸ்கர் சீனுவாசன். சர்வதேச கராத்தேவில் இந்தியாவின் முகமாகத் திகழ்ந்து வரும் இவர், சமீபத்தில் வெளியான "கைலா' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.
சினிமாவில் கராத்தே கலை 

தமிழகத்தைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் பாஸ்கர் சீனுவாசன். சர்வதேச கராத்தேவில் இந்தியாவின் முகமாகத் திகழ்ந்து வரும் இவர், சமீபத்தில் வெளியான "கைலா' படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை எதிர்பார்க்கும் இவர், தான் பெரிதும் நேசிக்கும் கராத்தே கலையை வளர்க்கும் விதமாக சினிமாவை பயன்படுத்த எண்ணுகிறார்.

இது குறித்து அவர் பேசும் போது.....""பல மொழிகள் இருந்தாலும், எனக்கான ஒரே மொழி கராத்தேதான். என் உலகமே அதுதான். ஒரு இருக்கையில் கட்டிப் போட்டாலும், அதில் மனம் ஓட்டாமல் இருக்கும். அது என் இயல்பு. இப்போது சினிமா விரும்பி ஏற்றுக் கொண்டது. ஆனால் என் உயரம் இதுவல்ல. இருந்தாலும் ஒரு விருப்பம்.

நல்ல சினிமாவுக்கான இலக்கணங்கள் எது என்பது எனக்குத் தெரியும். எந்த ஒப்பனையும் இன்றிப் பார்ப்பது. நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவுமறைவின்றித் தரிசித்து, அப்படித் தரிசிக்கும் உண்மைகளை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து அதையே உணர்வு பூர்வமாகவும் சொல்லிவிட்டால் அது நல்ல சினிமா. அப்படியான சினிமாக்கள்தான் என் தேர்வு. என் அனுபவங்கள் பெரிதாகும் என நினைக்கிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com