5 மொழிகளில்...

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் படம்" பாம்பாட்டம். "காக்க காக்க', "திருட்டுப்பயலே', "நான் அவனில்லை' உள்ளிட்ட படங்களில் நடித்த
5 மொழிகளில்...

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் படம்" பாம்பாட்டம். "காக்க காக்க', "திருட்டுப்பயலே', "நான் அவனில்லை' உள்ளிட்ட படங்களில் நடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். தொடர்ந்து ஆக்ஷன், சென்டிமெண்ட் படங்களில் நடித்து வந்த ஜீவன் முதன் முறையாக நடிக்கும் ஹாரர் படம் இது. தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் வி.சி வடிவுடையான் இந்தப் படத்தின் கதை எழுதி இயக்குகிறார்.
 ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் 5 மொழிகளிலும் இருந்து முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளார்கள். அதற்கான தேர்வு நடந்து வருகிறது. தமிழில் ஜீவன் நடிக்கிறார். முன்னணி கிராபிக்ஸ் நிறுவனமொன்று இந்தப் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறது. பா.ராகவன் வசனம் எழுதுகிறார். இனியன் ஹரீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரீஷ் இசையமைக்கிறார்.
 யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். தயாரிப்பு - பழனிவேல். நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் இம்மாத இறுதியில் தொடங்குகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com